Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

காட்டாளன் (பட விமர்சனம் )

படம்: காட்டாளன்

நடிப்பு: ஆண்டனி வர்கீஸ், சுனில், ஜெகதீஷ், கபீர் துகான் சிங், தூஷாரா விஜயன், அன்சான் ரவி, ராஜ் திறந்தசு

தயாரிப்பு: செரிப் முகமது

இசை: ரவி பசுரூர் (பின்னணி இசை )

ஒளிப்பதிவு : ரெனதீவ்

இயக்கம்: பால் ஜார்ஜ்

பிஆர்ஓ : நிகில் முருகன்

கதை : காட்டுப் பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை கொன்றுஅதன் தந்தங்களை கைப்பற்றி கடத்தி விற்று அடாவடி ராஜ்ஜியம் நடத்துகிறார் சுனில். அத்துடன் மலை காட்டு கிராமத்தில் வசிக்கும் மக்களையும் மிரட்டி தனது அடிமையாக்கி கொள்கிறார் அவர்களை வைத்து யானைகளையும் கொள்கிறார் . இந்த நிலையில் அப்பகுதிக்கு வருகிறார் ஆண்டனி வர்கீஸ். அங்கு காட்டு கிராம மக்கள் படும் அவதியை கண்டு அவர்களுக்காக இரக்கப்பட்டு சுனில் கூட்டத்திட்டமிருந்து அவர்களை காப்பாற்ற முடிவு செய்கிறார். அத்துடன் அந்த சாம்ராஜ்யத்தை உடைத்து அந்த இடத்தை பிடிக்கவும் திட்டமிடுகிறார். தனி ஒருவனாக இருக்கும் ஆண்டனியால் இதை சாதிக்க முடிந்ததா என்பதுதான் கிளைமாக்ஸ்.

சந்தன கடத்தல் வீரப்பன் செய்த காரியத்தைத்தான் இந்த படத்தில் சுனில் செய்வதுபோல் காட்டி இருக்கிறார்கள். யானைகளை வேட்டையாடி கொன்று அதன் தந்தங்களை எப்படி பிரித்தெடுக்கிறார்கள் என்பதை ஒரு காட்சியில் செய்து காட்டுகிறார்கள். அவ்வளவு பெரிய யானையை மூன்று பேரால் வீழ்த்த முடியுமா என்று கேள்விக்கு கண்முன் சாட்சியாக இந்த காட்சி இருக்கிறது.

சுனில் கொடூரமான வில்லனாக நடித்திருக்கிறார். அதேசமயம் ஜெயிலர் படத்தில் தமன்னாவுடன் தன்னை நடனம் ஆட விடவில்லை என்று கோபித்துக் கொள்வார். அவரது அந்த ஆசை இந்த படத்தில் ஒன்றுக்கு இரண்டாக இரண்டு கவர்ச்சி நடன நடிகைகளுடன் ஆடி தனது நடன ஆசையை தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

கிளைமாக்ஸ்சில் இன்ப அதிர்ச்சியாக மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு வில்லத்தன ஆக்டிங் கொடுத்திருக்கிறார்.

ஆண்டனி வர்கீஸ் நீண்ட நேரத்திற்கு பிறகு தனது ஹீரோ ஹிசத்திற்கு வருகிறார். சண்டைக் காட்சிகளில் அதிரிபுதிரி செய்திருக்கிறார்.

படத்தில் ஆக்சன், கேசிங்  என்று தொடர்ச்சியாக காட்சிகள் பரபரக்கிறது. ஆனால் புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை ஏற்கனவே யானை தந்த கடத்தல் படங்கள் வந்திருக்கின்றன, சமீபத்தில் கூட செம்மர கடத்தல் படமாக புஷ்பா  திரைக்கு வந்தது. அந்தப் படங்களின் பாதிப்பு இந்த படத்திலும் இயக்குனர் பால் ஜார்ஜ் கையாண்டிருக்கும் திரைக்கதை மூலம் வெளிப்படுகிறது.

பின்னணி இசையை  பவராக அமைத்திருக்கிறார் ரவி பசுரூர்.

காட்டுப்பகுதிக்குள்  ரணதிவ் கேமராவை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ஓடி படமாக்கி தனது கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

காட்டாளன் – லாஜிக் இல்லாவிட்டாலும் ஆக்சன் பிரியர்களுக்கு விருந்து.

 

Review By

K Jayachandhiran

Trending cinemas now.com

Related posts

Abhishek Bachchan presents Prime Video’s Suzhal – The Vortex at IIFA Rocks

Jai Chandran

தூய தமிழ் பேசினால் வேற்றுகிரகவாசிபோல் பார்ப்பதா? தங்கர்பச்சான் கேள்வி

Jai Chandran

Dhanush Builds a Three-Storey School Building

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend