Trending Cinemas Now
Uncategorized

‘நாக பந்தம்’ படத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது..

இந்திய சினிமாவில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் புராண அதிரடி சாகச படமான ‘நாக பந்தம்’ படத்தின் கவுண்ட் டவுன் தொடங்கியது*

நாடு தழுவிய பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் ‘நாக பந்தம்’. எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று வெளியாகும் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது

அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாக பந்தம்’- புராணம் – சாகசம் – பண்டைய ரகசியங்கள்-  தெய்வீக சக்தி மற்றும் அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட ஒரு பிரம்மாண்டமான காட்சி அமைப்பில் உருவாகி, இதுவரை கண்டிராத தனித்துவமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என உறுதியளிக்கிறது.

NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் ‘நாக பந்தம்’ படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்ப தரத்துடன், ஒரு உண்மையான பான் இந்திய அளவிலான பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கப்படுகிறது.

சக்தி வாய்ந்த முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விராட் கர்ணா நடிக்கிறார். அவருடன் நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , மகேஷ் மஞ்சரேக்கர்,   ரிஷப் சாவ்னி   உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் புராண சாகச வகையிலான படைப்புகளின் எல்லையை மறு வரையறை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர்.. சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்திற்கான வீடியோவில் ஒரு பிரம்மாண்டமான பழங்குடி இன மக்களின் கடல் போர் மற்றும் தீவிரமான சாகச சண்டை காட்சிகள்.. அது தொடர்பான பிரமிக்க வைக்கும் காட்சி…இப்படத்தின் பிரம்மாண்டமான அளவு – சினிமாவின் கம்பீரம் மற்றும் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம் பிடித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. இது ஒரு முழுமையான திரையரங்க அனுபவத்திற்கும் உறுதியளிக்கிறது.‌

இந்த அதிரடியான சண்டைக் காட்சிகளை கண்களுக்கு விருந்தாகவும் தொழில்நுட்ப ரீதியாக தீவிரமான சண்டை காட்சிகளை வடிவமைப்பதில் உலக அளவில் பிரபலமாகி, சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற சண்டை பயிற்சி இயக்குநர் விளாட் ரிம்பர்க் வடிவமைத்துள்ளார். இப்படத்தில் பிரம்மாண்டமான முறையிலான பழங்குடியினரின் சண்டைகள்-  கடல் போர் காட்சிகள்-  நீருக்கு அடியில் நடைபெறும் சண்டை காட்சிகள் – என இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத பிரம்மாண்டமான சாகச காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரமிக்க வைக்கும் காட்சிகளையும் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் சினிமா தருணங்களையும் வழங்குவதற்காக.. பல முன்னணி ஸ்டுடியோகள் இரவு பகலாக உழைத்து வருகின்றன. அத்துடன் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் வி எஃப் எக்ஸ் – VFX பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பழங்கால கோயில்கள்-  மாய உலகங்கள் முதல் பிரம்மாண்டமான போர்க்காட்சிகள் மற்றும் தெய்வீக அம்சங்கள் வரை-  ஒரு உலகளாவிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் அதிநவீன விசுவல் எபெக்ட்ஸ்களுடன் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்திய சினிமாவில் இருந்து வெளிவந்த மிகப்பெரிய காட்சி மொழியிலான படைப்புகளில் ஒன்றாக நாக பந்தம் படம் இருக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் ஏற்கனவே விவரித்து வருகின்றன.

இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தின் வட இந்திய திரையரங்கு விநியோக உரிமைகளை பெற்றுள்ளது. அத்துடன் இந்தப் படத்தை இந்தி பேசும் மக்களை கவர்வதற்காக.. அவர்களுக்கான சந்தையில் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட ஜீ ஸ்டுடியோஸ் திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டணி ‘நாக பந்தம்’ படத்திற்கு நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய வரவேற்பை அளித்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது. இவை இப்படத்தின் மீது திரையுலக வணிகர்கள் கொண்டுள்ள வலுவான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.‌

பண்டைய ரகசியங்கள் – மறைக்கப்பட்ட புதையல்கள்-  தெய்வீக சக்திகள் – மறக்கப்பட்ட புராணக் கதைகளின் பின்னணியில் அமைந்திருக்கும் ‘நாக பந்தம்’ திரைப்படம் – இந்திய புராணங்கள் மற்றும் கலாச்சாரத்தில் வேரூன்றிய, உணர்வு பூர்வமான மற்றும் கண்களுக்கு விருந்தளிக்க கூடிய காட்சிகளைக் கொண்ட ஒரு அற்புதமான பயணத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் பிரம்மாண்டம்- வியக்க வைக்கும் காட்சி அமைப்புகள் – விறுவிறுப்பான சண்டை காட்சிகள் – கற்பனைக்கு அப்பாற்பட்ட சாகச காட்சிகள் – சக்தி வாய்ந்த இசை – சுவராசியமான கதைக்களம் – என பல அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால், இந்த திரைப்படம் 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதன் காரணமாக இப்படத்தைக் காண்பதற்கான காத்திருக்கும் கால கட்டம் குறைந்து வருகிறது. அதே தருணத்தில் இப்படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் புராண அதிரடி சாகச படைப்பான நாக பந்தம் திரைப்படம்-  திரை அரங்குகளில் வெளியாக இன்னும் 44 நாட்களே மீதமுள்ளன. அதனால் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது.  இந்தத் திரைப்படம் உலகெங்கிலும் எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதியன்று வெளியாகிறது.

*

Related posts

ரஜினிகாந்த் காலில் விழுந்து ராகவா ஆசி பெற்றார்

Jai Chandran

இயக்குனர் ஷங்கர் மூத்த மகள் திருமண வரவேற்பு

Jai Chandran

Title wil be Revealed with a Teaser by PuneethRajkumar

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend