Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் பொது செய்திகள்

முதல்வர் விழாவில் வந்தே மாதரம் பாடல் : நடிகை ரோகிணி எதிர்ப்பு

தமிழக முதலமைச்சராக விஜயின் பதவி ஏற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இனி அப்பாடல் தமிழ்நாட்டில் பாடப்படாது என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நடிகை ரோகினி கூறியிருக்கிறார் . இதுகுறித்து
முதலமைச்சர் விஜய்க்கு நடிகை ரோகினி தனது முகநூலில் கோரிக்கை வைத்திருக்கிறார். அதன் விவரம் வருமாறு :

வந்தே மாதரம் பாடலின் சில பத்திகள் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் ஊறு விளைவிப்பவை என்பதனாலேயே அப்பத்திகளை நீக்கிவிட்டு எஞ்சிய வரிகளை தேசிய பாடலாக அரசமைப்புச் சட்ட அவை ஏற்றது. ஆனால் அது ஒருபோதும் தேசிய கீதத்திற்கு இணையாக முன்வைக்கப்படவில்லை. எனினும், இப்போதைய ஒன்றிய அரசு முன்பு நீக்கப்பட்ட வரிகளையும் சேர்த்து தேசிய கீதத்திற்கு முன்னதாக “வந்தே மாதரம்” பாடலை இசைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. சமூக ஒற்றுமையைப் பாதுகாக்கும் பொருட்டு ஒன்றிய அரசு இம்முடிவை கைவிட வேண்டுமெனவும், அப்பாடல் தமிழ்நாட்டில் இசைக்கப்படாது என்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தில் சிறப்புத்தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

– 17ஆவது சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு
தமுஎகச மாநிலக்குழு  வெளியிட்ட கலை இலக்கியச் சமூகத்தின் கோரிக்கை சாசனத்திலிருந்து…
இவ்வாறு முகநூலில் நடிகை ரோகிணி பதிவிட்டுள்ளார்.
#tvk #vijayfans #vijaytamilnaduchiefminister    #vanthemadharam

Related posts

டீ கடை கிடையாது: ஊரடங்கு இன்று முதல் தீவிரம்

Jai Chandran

காஞ்சிபுரத்தில் ஹிப்ஹாப் ஆதி பிடித்த கதை படமானது

Jai Chandran

My Wife Is My Backbone:Actor Nasser

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend