Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

முத்து என்கிற காட்டான் (வெப் சீரிஸ் விமர்சனம் )

படம்: முத்து என்கிற காட்டான்

நடிப்பு: விஜய் சேதுபதி, மிலின்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், விஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், அபி நட்சத்திரா, வடிவேல் முருகன்

தயாரிப்பு: விஜய் சேதுபதி

இசை: ராஜேஷ் முருகேசன்

ஒளிப்பதிவு : மது நீலகண்டன், சண்முகசுந்தரம்

இயக்கம்: மணிகண்டன், பி அஜித் குமார்

வெளியீடு: ஜியோ ஹாட்ஸ்டார்

பிஆர்ஓ : யுவராஜ்

வழக்குகள் எதுவுமே இல்லாததால் அந்த கிராமப்புறத்தில் உள்ள போலீஸ் நிலையத்தை மூடுவதற்காக அரசு முடிவு எடுத்த நிலையில் திடீரென்று அப்பகுதியில் உள்ள மலைப்பகுதியில் வெட்டப்பட்ட தலை ஒன்று கிடக்கிறது. இதையடுத்து போலீஸ் பரபரப்பாகிறது. தலை மட்டும் கிடைக்க உடல் எங்கு என்று தெரியாமல் போலீஸ் திணறுகிறது. அதைத் தேடும் பணி நடக்கும்போது வெட்டப்பட்ட நபர் யார் என்ற கேள்வி எழ  அதை நோக்கி கதை நகர்கிறது.

விஜய் சேதுபதி நடித்திருக்கும் முதல் வெப் தொடர். தொடக்க காட்சியிலேயே விஜய் சேதுபதி தலை கிடைக்க காட்சி பரபரப்பாகிறது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், என்ன வேலை செய்கிறார் என்ற கேள்வி எழுப்பி அதற்கு விடை காணும் வகையில் திரைக்கதை தொடர அதில் விஜய் சேதுபதியின் அதட்டல் நடிப்பு ஆரம்பமாகிறது.

விஜய் சேதுபதி யார் என்று கண்டுபிடிக்கும் போலீஸ் டீமை தலைமை தாங்கும் முத்துக்குமார் வழக்கமாக வில்லன் கதாபாத்திரத்தில் பயமுறுத்துவார். இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வந்து எதார்த்தமான விசாரணை மேற்கொண்டு சாதாரண ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பது இதுவரை அவரிடம்
காணப்படாத மாறுபட்ட நடிப்பு.

மேலும் மிலின்த் சோமன், சுதேவ் நாயர், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், விஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், அபி நட்சத்திரா, வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி தயாரித்திருக்கும் இந்த வெப் சீரிசை மணிகண்டன் பி அஜித் குமார் இயக்கியுள்ளனர். காக்கா முட்டை படத்தை வழங்கிய மணிகண்டன் இப்படத்தில் தனது இயக்கத்தின் பாணியை முற்றிலும் மாற்றி திரில்லருடன் கூடிய வெப்சீரிசை வழங்கி இருக்கிறார்.

ராஜேஷ் முருகேசன் இசை,
மது நீலகண்டன், சண்முகசுந்தரம் ஆகியோரின் ஒளிப்பதிவு காதையும் கண்களையும் கட்டிப்போடுகிறது
ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் முத்து என்கிற காட்டன் வெளியாகி இருக்கிறது.

முத்து என்கிற காட்டான் – முதல் எபிசோடு பார்க்கத் தொடங்கினால் தொடர்ச்சியாக பார்த்து முடிக்கும் அளவுக்கு விறுவிறுப்பான தொடர்.

Review By
K Jayachandhiran
trending cinemas now.com

Related posts

Ravi Varman has been honoured with Membership of ASC

Jai Chandran

லிங்குசாமி இயக்கும் RAPO19 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

Jai Chandran

JaiBhim Issues:Vettrimaran Statement

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend