Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துரந்தர் பழிவாங்கல் படத்தின் டைட்டில் ட்ராக் ‘ஆரி ஆரி’ வெளியானது..

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துரந்தர் பழிவாங்கல் படத்தின் டைட்டில் ட்ராக் ‘ஆரி ஆரி’ வெளியானது.

சமீபத்தில் வெளியான துரந்தர் பழிவாங்கல் படத்தின் ட்ரெய்லர் தொடர்ந்து சாதனை படைத்து வருவதோடு, 45க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே, அதில் பின்னணி இசையாக வந்த ‘ஆரி ஆரி’ பாடலை ரசிகர்கள் முணுமுணுக்க தொடங்கிவிட்டனர். மேலும், இப்பாடலின் வெளியீட்டிற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

தற்போது இந்த அதிரடியான பாடல் டி-சீரிஸ் யூடியூப் சேனலில் தற்போது வெளியாகியுள்ளது. துடிப்பான பீட்ஸ், வலிமையான குரல்கள் மற்றும் அதிரடி ராப் வரிகள் அடங்கிய இந்த பாடல், படத்தின் தீவிரமான உலகை பிரதிபலிப்பதோடு, அடுத்த பெரிய வைரல் ஆந்தமாக மாறும் வகையில் ஒரு சிறந்த இசை அனுபவத்தை வழங்குகிறது.

ஷாஸ்வத் சச்தேவ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடலை, அவரே அரேஞ்ச் மற்றும் ப்ரோக்ராமிங் செய்துள்ளார். நவீன இசையுடன் பஞ்சாபி தாக்கத்தை இணைத்து, கேட்போரை ஆட வைக்கும் வகையில் இந்த ட்ராக் ஈர்க்கக்கூடிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. நவ்தேஜ் சிங் ரெஹால், கான் சாப், ஜாஸ்மின் சாண்ட்லாஸ் மற்றும் சுதிர் யதுவன்ஷி ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். இதற்கான ராப் வரிகளை எழுதி பாடியுள்ளனர் ரெபெல் மற்றும் டோக்கன். பிரபல பாடலாசிரியர் இர்ஷாத் கமில் மற்றும் பாம்பே ராக்கர்ஸ் இணைந்து பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளனர். இதன் ஸ்கோரை ஆடம் லூகாஸ் தயாரித்துள்ளார்.

பார்ப்பதற்கு பிரமிப்பூட்டும் இப்பாடலின் மியூசிக் வீடியோ, ரன்வீர் சிங்கின் ஆக்ரோஷமான மற்றும் கம்பீரமான தோற்றத்தை முன்னிலைப்படுத்தி, பாடலை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது. ஸ்டைலான ஆக்‌ஷன் மற்றும் விறுவிறுப்பான காட்சிகளால் நிரம்பியுள்ள இந்த வீடியோ, ரன்வீர் சிங்கின் சக்திவாய்ந்த திரை ஈர்ப்புடன் படத்தின் பிரம்மாண்டத்தையும் தீவிரத்தையும் வெளிப்படுத்துகிறது.

அதிரடியான இசையையும், மாஸான காட்சிகளையும் ஒன்றிணைத்து, படத்தின் இசை பயணத்தை ஒரு விறுவிறுப்பான, ஹை-ஆக்டேன் தாக்கத்துடன் ‘ஆரி ஆரி’ பாடல் தொடங்கி வைத்துள்ளது.

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் – துரந்தர் பழிவாங்கல். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

ஆதித்யா தர் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த ஹை-ஆக்டேன் ஸ்பை-ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தை, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் லோகேஷ் தர் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். குடி பத்வா மற்றும் உகாதி பண்டிகையை முன்னிட்டும், ரம்ஜானுக்கு முன்பாகவும், 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

முகம் தெரியாத மனிதர்களின் இந்த கதை, 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் விரிகிறது.

*பாடல் லிங்க்* – https://youtu.be/dESIGVxSSCE?si=V1ML8KG5bD6rOjK6

Related posts

The First look of Hostel

Jai Chandran

Raja, G. V. Prakash and Sean Roldan Together for Modern Love

Jai Chandran

Kamal Haasan 40 years of friendship

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend