Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர்  GKM தமிழ்குமரன் தலைமையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிரந்தர உறுப்பினர் மணிகண்டன் (MJD Production)  சங்கத்திற்கு ரூபாய். பத்து லட்சம் (Rs.10,00,000/-) நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்நிகழ்வில் தலைவர் GKM தமிழ்குமரன் அவர்களுடன், துணைத் தலைவர் ஆர்.கே. சுரேஷ், செயலாளர்  ராதாகிருஷ்ணன், பொருளாளர் சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளர் திருமதி.சுஜாதா விஜயகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

சிறப்பான இந்த தொடக்கத்திற்கு, தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தலைவர் தமிழ் குமரன் அவர்கள் தலைமையில், புதியதாக பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக ஒரு சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்.

 

 

 

Related posts

கரகாட்டக்காரன் கூட்டணி இளையராஜா- ராமராஜன் இணையும் சாமானியன்

Jai Chandran

Third look of 335KM launched by RKSelvamani

Jai Chandran

Axess Film Production No12 First schedule Wrapped up

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend