Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘முஸ்தபா முஸ்தபா’ பட ப்ரீ ரிலீஸ் நிகழ்வு..

தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில், இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் கதைநாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ’முஸ்தபா முஸ்தபா’. எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் நடிகர் சதீஷ் பேசியதாவது, “’முஸ்தபா முஸ்தபா’ ஜாலியான ஒரு படமாக இருக்கும். முஸ்தபா முஸ்தபா என்றாலே நமக்கு எல்லாம் நட்பு பாடல்தான் நியாபகம் வரும். அதனை மனதில் கொண்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தில் கதை அமைத்திருக்கிறோம். அதனால், நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஜாலியாக மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். பல பெரிய படங்களை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இந்தப் படத்தை வெளியிடுகிறது. தொடர்ந்து என்னுடன் மூன்று படங்கள் பணிபுரிந்த இசையமைப்பாளர் ஜோன்ஸ் அவர்களுக்கு நன்றி. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். ஆணும் பெண்ணும் சமமல்ல. பெண்கள் ஆண்களை விட உயரத்தில் உள்ளனர். பெண்கள் தெய்வத்திற்கு சமம். அதனால், யார் குடித்தாலும் தவறுதான். நான் என் வாழ்க்கையில் இதுவரை சிகரெட், மது தொட்டதில்லை. இதை பெருமைக்காக சொல்லவில்லை. நான் சொன்னதை கேட்டு நாலு பேர் குடிக்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தை கைவிட்டால் சந்தோஷப்படுவேன்” என்றார்.

இயக்குநர் பிரவீன், “’முஸ்தபா முஸ்தபா’ படத்தின் டிரெய்லருக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இசையும் நன்றாக வந்துள்ளது. ஜாலியான படமாக எடுத்துள்ளோம். டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருந்தால் படமும் நிச்சயம் பிடிக்கும். மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளுக்கு சென்று படம் பாருங்கள்”.

நடிகை மோனிகா சின்னகோட்லா, “ஜாலியான படமாக இருக்கும். எல்லோருக்கும் பிடிக்கும். தியேட்டரில் வந்து பாருங்கள்” என்றார்.

நடிகை மஹிமா , “படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருக்கிறோம். கேர்ள்ஸ் எல்லோரும் சேர்ந்தால் ஜாலிதான். படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு நீங்கள் வெளியே வரும்போது சிரித்துக் கொண்டேதான் வருவீர்கள். அதற்கு நாங்கள் உத்திரவாதம்”.

நடிகை மாதவி, “இதுநாள் வரை நாம் பார்த்த பல படங்களில் நகைச்சுவை அங்கங்கேதான் இருக்கும். ஆனால், இதில் படம் முழுக்க உள்ளது. இயக்குநர் பிரவீன் எங்களுக்கு சூப்பரான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். நடிகர் சதீஷூடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம். மார்ச் 6 ஆம் தேதி படம் வெளியாகிறது. திரையரங்குகளுக்கு சென்று கண்டிப்பாக பாருங்கள்”.

இசையமைப்பாளர் ஜோன்ஸ், ”’முஸ்தபா முஸ்தபா’ படத்தின் பாடல்கள் எல்லாமே நன்றாக வந்திருக்கிறது. படத்தின் கதை ரொம்பவே எனர்ஜியாக இருக்கும். என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் பிரவீன் மற்றும் நடிகர் சதீஷூக்கு நன்றி” என்றார்.

Related posts

Poster of Chethan Cheenu’s upcoming flick Directed by Kaveri Kalyani

Jai Chandran

ரகு தாத்தா (பட விமர்சனம்)

Jai Chandran

Bedurulanka 2012’ First Look is interesting

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend