படம்: 4த் ஃப்ளோர் ( போர்த் ஃப்ளோர்)
நடிப்பு : ஆரி அர்ஜுனன், தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், சுப்பிரமணியம் சிவா
தயாரிப்பு:A ராஜா
இசை: தரண் குமார்
ஒளிப்பதிவு: ஜெ லக்ஷ்மன்
இயக்கம்: எல் ஆர் சுந்தர பாண்டி
பிஆர்ஓ: A ராஜா
கதை: ஒதுக்குப்புறம் காட்டுப்பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பலரும் காலி செய்திருந்த நிலையில் தன் காதலியின் அழைப்பை ஏற்று மும்பையிலிருந்து சென்னை வரும் ஆரி அர்ஜுனன். நான்காவது மாடியில் இருக்கும் வீட்டில் தங்குகிறார் அவரை பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வரவேற்கிறார்கள் தன்னை அழைத்த காதலியை காணாததால் அவரை தேடுகிறார் ஆரி கிடைக்கவில்லை. இதற்கிடையில் அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. எதற்கும் பயப்படாமல் தனது காதலி என்னவானார், அமானுஷ்ய சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை ஆரி அர்ஜுனன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கிளைமாக்ஸ்.
நெடுஞ்சாலை படத்தில் கரடு முரடான ஒரு நடிப்பை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்த ஆரி அந்த படத்துக்கு பிறகு தனது பெயரை ஆரி அர்ஜுனன் என்று மாற்றிக் கொண்டதோடு தனது தோற்றத்தையும் ரொம்பவும் எதார்த்த முகத்தோடு மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார்
போர்த் ஃப்ளோர் படத்தில் ஆரி அர்ஜுனன் நடிப்புபை காதல் ஏக்கம், தந்தை பாசம், அமானுஷ்ய பயமுறுத்தல், அதிரடி ஆக்சன் என நிறைய விஷயங்களை உள்ளடக்கி மாறுபட்ட விதத்தில் வெளிப்படுத்தி மனதில் பதிகிறார்
திடீர் திடீரென்று கதவு தட்டும் சத்தம், தூக்கில் தொங்குவது போன்ற கனவு போன்றவற்றால் பயந்தாலும் அதையும் மீறி தனது காதலியை தேடும் ஆரி அர்ஜுனனின் தைரியம் உற்சாகமூட்டுகிறது. இதுவரை அதிரடி சண்டைக் காட்சிகளில் பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்த ஆரி இந்த படத்தில் ஆக்சன் காட்சியில் கவனத்தை ஈர்க்கிறார்

சுப்பிரமணியம் சிவா அதிரடி ஆக்சன் காட்டாவிட்டாலும் மிரட்டலாக பேசி வில்லத்தனத்தை நிறைவு செய்கிறார் தலைவாசல் விஜய் சஸ்பென்ஸ் பாத்திரமாக வருகிறார்.
படத்தை :A ராஜா தயாரித்திருக்கிறார்
இசையமைப்பாளர் தரண் குமார் திகில் இசையுடன் மெலடி மெட்டுக்கள் போட்டு பாடல்களை தாளம் போட வைக்கிறார்.
ஜெ லக்ஷ்மன் ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.
ஹாரர் கதையை செண்டிமெண்ட் ஆக்சன், என கமர்சியல் அம்சங்களை கலந்து கவனச் சிதறல் இல்லாமல் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் எல் ஆர் சுந்தர பாண்டி தொய்வான சில இடங்களில் ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கு கத்தரி போட்டு குறைத்தால் படத்தின் வேகம் அதிகரிக்கும்.
போர்த் ப்ளோர் – அமானுஷ்யம் கலந்த பிரேக்கப் காதல் கதை.

Review by
K Jayachandhiran
Trending cinemas now.com
,
