Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லெவன் (பட விமர்சனம்)

படம்: லெவன்

நடிப்பு: நவீன் சந்திரா, அபிராமி, திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜெய்

தயாரிப்பு: அஜ்மல் கான், ரேயா ஹரி

இசை: டி.இமான்

ஒளிப்பதிவு:கார்த்திக் அசோகன்

இயக்கம்:லோகேஷ் ஜெல்ஸ்

பி ஆர் ஒ: நிகில் முருகன்

நகரில் சிலர் எரித்து கொல்லப்படுகின்றனர். தொடர்ச்சியாக இந்த கொலைகள் நடப்பதால் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரி நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கப்படுகிறது. விசாரணையில் வெவ்வேறு விஷயங்கள் வெளியாகிறது. இவன்தான் கொலைகாரன் என்று ஒரு முடிவுக்கு வரும்போது திடீர் திருப்பம் ஏற்படுகிறது. என்னதான் முடிவு. படத்தில் பாருங்கள்.

லெவன் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் என்பதாலும் இப்படத்தின் பல சஸ்பென்ஸ்களின்
தொடர்ச்சி ஒன்றை யொன்று முடிச்சு போட்டிருப்பதாலும் எதைச் சொன்னாலும் அது சுவாரஸ்யத்தை குறைத்துவிடும் .

இந்த கதைக்கு ரெபரன்ஸ் இருக்கா என்றால் விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி படங்களை கூறலாம். அந்தபடங்கள் போல் இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை.. ஆனால் அதை ரெபரன்சாக வைத்து லெவன் போன்று வேறு டைமன்ஷனில் பல கதைகளை உருவாக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக ஹீரோ நவீன் சந்திரா அனல் பறக்க சண்டை போட்டுகிறார். காதலிப்பதாக சொல்லி தன்னையே சுற்றி வரும் ஹீரோயினை நவீன் சந்திரா விரட்டியடிப்பது ஹீரோவுக்குள் ஏதோ ஒரு சோகம், வெறுப்பு ஒளிந்திருப்பதை இயக்குனர் மறைமுகமாக காட்டி இருக்கிறார்.

படத்தில் ஆக்ஷன், சஸ்பென்ஸ் நிறையவே இருக்கிறது . அதேபோல் காதல், காமெடிக்கு பஞ்சமும் நிறையவே இருக்கு.

அபிராமி, திலீபன், ரித்விகா, ரேயா ஹரி, ஆடுகளம் நரேன், அர்ஜெய் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

அஜ்மல் கான், ரேயா ஹரி தயாரித்திருக் கிறார்கள் .

டி.இமான் இசையில் சீன்கள் வேகமெடுக் கின்றன.

கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு ஒ கே

இயக்குனர் லோகேஷ் ஜெல்ஸ் படத்தின் சஸ்பென்சை கிளைமாக்ஸ் முடிந்த பிறகும் தொடர்வதால் படம் முடிந்துவிட்டது என்று எழுந்து புறப்பட தயாராபவர்களை மேலும் சில நிமிடங்கள் அரங்கிலேயே நிற்க வைக்கிறது.

லெவன் – சஸ்பென்சுக்குள் சஸ்பென்ஸ்.

 

 

Related posts

ஆர்யமாலா( பட விமர்சனம்)

Jai Chandran

“ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” இசை – டிரெய்லர் வெளியீடு: பாக்யராஜ் வாழ்த்து..

Jai Chandran

எம்ஜிஆர் பாடலுடன் அப்புக்குட்டி கொரோனா அட்வைஸ்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend