Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கடைசி உலகப் போர் (பட விமர்சனம்)

படம்: கடைசி உலகப் போர்

நடிப்பு: ஹிப் ஹாப் ஆதி, நாசர், நட்டி,, அனகா  அழகம்பெருமாள், ஹரிஸ் உத்தமன், சிங்கம் புலி, முனிஸ்காந்த், கல்யாண், இளங்கோ,  குமணன் மற்றும் பலர்

தயாரிப்பு: ஹிப் ஹாப் தமிழா என்டர்டடெய்ன்மென்ட்

இசை: ஹிப் ஹாப் ஆதி

ஒளிப்பதிவு: அர்ஜுன் ராஜா

இயக்கம்: ஹிப் ஹாப் ஆதி

பிஆர்ஓ: சதீஷ் S2 மீடியா

இதுவரை இசையமைப்பாளர் பாடகர் நடிகராக பார்த்து வந்த ஹிப் ஹாப் ஆதி இப்படத்தில்  தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.

அரசியலில் முக்கிய தலைகளை கைக்குள் போட்டுக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை ஆட்டிப் படைக்கிறார் நட்டி. முதல்வராக இருக்கும் நாசரை தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள பல திட்டங்கள் போடுகிறார். நாசர் தனக்கு பின்னால் தன் மகள்  தனது வாரிசாக வரவேண்டும் என்று கூறுகிறார்.  இதை மகள் விரும்பாத நிலையில் ஒரு சந்தர்ப்பத்தில் ஆதியை சந்திக்கிறார். அவர் தரும் நம்பிக்கையில்  நாசரின் மகள் அரசியலுக்கு வர சம்மதிக்கிறார். இந்த நிலையில் எதிர்பார்க்காத வெளிநாட்டு தாக்குதல் தமிழ்நாட்டு மீது நடக்க  தமிழ்நாடு தனித்தீவு போல் மாறிவிடுகிறது. சீன படையினர் தமிழகத்தை கைப்பற்றி தங்கள் அதிகாரத்தில் வைத்துக் கொள்கின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் அதிகாரத்தில் இருந்து ஆட்டிப் படைத்தவர்கள் ஒரே நொடியில் தெருவுக்கு வந்து விடுகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடியாத பதிலாக அளிக்கிறது கிளைமாக்ஸ்.

சதுரங்க வேட்டையில் பார்த்த நட்டியின்  பரபரப்பான நடிப்பு படத்தின் முதல் பாதி வரை ஒரு பெரிய அரசியல் பூக்கம்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற போக்கில் காட்சிகள் ஜிவ்வென்று பறக்கிறது. திடீரென்று நடக்கும் வெளிநாட்டு தாக்குதல் நிலைகுலைய  வைக்கிறது.

இதுவரை இப்படி ஒரு காட்சி அமைப்பை ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் அதாவது தமிழகத்தின் மீது சீனா அணுகுண்டு வீசுவது, தலைக்கு மேல் போர் விமானங்கள்  காற்றை கிழித்து பறப்பதுபோன்ற காட்சி கற்பனையிலும் எண்ணிப் பார்க்காத காட்சிகள். சீனப் படை தமிழ்நாட்டு மக்களை சிறை பிடித்து கொடுமைப்படுத்தும் காட்சிகள் இலங்கையில் ஈழத் தமிழர்கள் பட்ட கொடுமையை கண்முன் நிறுத்துகிறது.

இப்படி ஒரு கதையை இயக்கப் போகிறேன் என்று ஹிப்ஹாப் ஆதி வேறு தயாரிப்பாளரிடம் கூறியிருந்தால் நிச்சயம் அதற்கு ஒப்புதல் அளித்திருப்பது சந்தேகம்தான் அந்த தர்ம சங்கடத்தை அனுபவிக்காமல் தானே துணிச்சலாக படத்தையும் தயாரித்து அதை இயக்கவும் செய்திருக்கிறார். அந்த துணிச்சலுக்கு அவருக்கு கை குலுக்கலாம்.

சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்,  ரிப்பன் பில்டிங், டைடல் பார்க் என எல்லா கட்டிடங்கள் மீதும் குண்டுமழை பொழியும் காட்சிகள்  அதிர வைக்கிறது.

அரசியல் கதையாக முதல் பாதி வரை நகர்ந்த   படம் திடீரென்று போர்க்கள காட்சிக்குள் நுழைவது எதிர்பார்க்காத அதிர்ச்சி மட்டுமல்ல படத்திற்கு புதிய அதிர்வை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பெரிய அதிர்ச்சியை ரசிகர்களால் தாங்க முடியுமா என்பதுதான் சந்தேகம். கிளைமாக்சில் சொல்லப்படும் மனிதம் என்ற வார்த்தை ரசிகர்கள் மனதில் பதிந்தால் படத்துக்கு அதுவே வெற்றி.

சீன ராணுவ கொடுமைக்கார அதிகாரிகளின் அட்டூழியங்கள். திகிலூட்டுகிறது.

தவறுக்கு மேல் தவறு செய்யும் நட்டியை ஒவ்வொரு முறையும் ஹிப் ஹப் ஆதி மன்னித்து அவரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதும் அதற்கு நட்டி செய்யும் எதிர்மறை காரியங்களும் படத்தில் சஸ்பென்சை அதிகரிக் கிறது

நாசர் முதலமைச்சராக இருந்து பின்னர் சீன படையால கைது செய்யப்பட்டு கைப்பாவை முதல்வராக மாறுவதும் ஆனால் சுதந்திரத்திற்காக  அவர் உயிருக்கு துணிவதும்  நறுக்கான காட்சி.

ஜாலியான,  காமெடியான இமேஜுடன்  ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் ஹிப்ஹாப் ஆதி இப்படத்தில் புதிய பரிமாணத்துக்கு  மாறி ஆசிட் டெஸ்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

தயாரிப்பு இயக்கம் ஹீரோ என மூன்று பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் ஹிப் ஹாப் ஆதிக்கு ரசிகர்கள் எந்தளவுக்கு கை கொடுக்கப் போகிறார்கள் என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இப்படி ஒரு கதையை இதுவரை எந்த இயக்குனரும் யோசித்தது இல்லை என்பது நிஜத்திலும் நிஜம்.

ஹிப்ஹாப் ஆதியே இசையும் அமைத்திருக்கிறார். காட்சிகளையும் கதையையும் படப்பிடிப்பையும் பான் இந்தியா ரேஞ்சுக்கு யோசித்திருக்கிறார் ஆனால் அதற்கேற்ப சில கதாபாத்திரங்களிலாவது வேற்று மொழி பிரபல ஹீரோக்களை நடிக்க வைத்திருந்தால் கூடுதல் பிளஸ் ஆக அமைந்திருக்கும்.

கடைசி உலகப் போர் –  அதிர வைக்கும் போர் அனுபவம்

 

 

 

 

 

 

 

 

Related posts

சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைக் குவித்த “மரியா”

Jai Chandran

SayajiShinde as Villian in Sabapathi

Jai Chandran

பிரபு , வெற்றி நடிக்கும் ராஜபுத்திரன் ஆடியோ விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend