Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தந்த திருமண விருந்து

‘டான்’ படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிக்கை யாளர்களை சந்தித்தனர்!. இதுபற்றிய  விவரம் வருமாறு:

எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுக மான சிபி சக்ரவர்த்தி. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் வெளி யாகி வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.

இயக்குனர் சிபி சக்கரவர்த் திக்கும்,  இன்போசிஸ்  சாஃப்ட்வேர்  நிறுவனத்தில் இன்ஜினியராகபணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இம்மாதம் செப்டம்பர்  கடந்த  5ம் தேதி ஈரோட்டில் திருமணம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் திரை யுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதி களுக்கு மனமார்ந்த வாழ்த்துக் களை தெரிவித்தனர்.

திருமணத்திற்குப் பின் சிபி சக்கர வர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும் இன்று மதியம்  சென்னையில் பத்திரிக்கையாளர் களை சந்தித்தனர். ‘டான்’ படத் திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி, அடுத்த படத்திற்கும் பத்திரிக்கை  யாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார். வெளி யூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை என்பதற்காகவே இந்த சந்திப்பு என்றார்.

பின்னர் அனைவருக்கும் ஸ்பெஷல்  திருமண விருந்து தந்தார்.

Related posts

Aalambana teaser is releasing tomorrow

Jai Chandran

SVC-யுடன் யாஷ் & KVN-ன் டாக்ஸிக் பட ஒப்பந்தம் சாதனை..

Jai Chandran

JAMES CAMERON’S “AVATAR 2” TICKET BOOKING RECORD

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend