Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கோவையில் ஹிப் ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சி

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் Icon ஆக கொண்டாடப்படும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின்  ரிட்டர்ன் ஆப் தி டிராகன் (Return Of The Dragon) இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது டார்க்யு என்டர்டெயின்மென்ட் .மற்றும் ராஜ் மெலடி (Torque Entertainment மற்றும் Raj melodies) நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்ட மான முறையில், கோயம்புத் தூரின் மிகபெரிய கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

தமிழக இன்டிபென்டன்ட் இசை துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமிழ் திரைத் துறையில் இசையமைப்பாள ராகவும், நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் யூத் ஐகான்   ஆக மாறியுள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரிக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ரிட்டர்ன் ஆப் தி டிராகன் எனும்  பெயரில் லண்டன், மலேசியா என உலக நாடுகளில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி முடிந்த நிலையில் தற்போது தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

டார்க்யு என்டர்டெயின்மென்ட் .மற்றும் ராஜ் மெலடிஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை  பிரம்மாண் டமாக நடத்தவுள்ளன.

இந்த  இசை நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக பல ஆச்சரியங் கள் காத்திருக்கின்றது.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த Music Concert, இப்போதே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில்  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில்  ஏற்பட்ட சிக்கல்கள், எதுவும் இவ்விழாவில் ஏற்படாத வாறு, அனைத்து முன்னேற்பாடு களும் செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை, ஆன்லைனில் Paytm ஆப் மூலம் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

Related posts

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம்..

Jai Chandran

கோஸ்ட் பஸ்டர்ஸ் ஆப்டர்லைப் (ஆங்கில பட விமர்சனம்)

Jai Chandran

Bachelor will be streaming on SonyLIV real soon

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend