Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

போகும் இடம் வெகு தூரமில்லை (பட விமர்சனம்)

படம்: போகும் இடம் வெகு தூரமில்லை

நடிப்பு: விமல், கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், நரேன், தீபா சங்கர்,  சார்லஸ் வினோத், மனோஜ்  குமார், பவன், அருள்தாஸ்

தயாரிப்பு: சிவ கல்லாரி

இசை: என்.ஆர். ரகுநந்தன்

ஒளிப்பதிவு: டெமி சேவியர் எட்வர்ட்ஸ

இயக்கம்: மைக்கேல் கே ராஜா

பிஆர்ஓ,: சதீஷ் ( AIM)

விபத்தில் இறந்த தந்தையின் உடலுக்கு யார் இறுதி காரியம் செய்வது என்பதில் நரேன் குடும்பத்துக்கும், பவன் குடும்பத்திற்கும் போட்டி ஏற்படுகிறது. இதற்கிடையில் சென்னையில் விபத்தில். இறந்த அவர்களது  தந்தையின் உடலை விமல் தனது அமரர் ஊர்தி வாகனத்தில் எடுத்துக் கொண்டு நெல்லையில் இருக்கும்  பவன் வீட்டை நோக்கி புறப்படுகிறார். நடுவழியில் கூத்து கலைஞர் கருணாஸ் லிப்ட் கேட்டு ஏறிக்கொள் கிறார். வழிப்பயணத்தில் பல நிகழ்வுகள் நடக்கிறது. இந்நிலையில் விமல் ஏற்றி வந்த  உடல்  காணாமல்போகிறது. இதனால் ஏற்படும் பதற்றம். கிளைமாக்ஸ்.வரை  சஸ்பென்சாக நீடிக்கிறது.

பிணத்தை ஏற்றி செல்லும் அமரர் ஊர்தி ஓட்டுனராக  மாறுபட்ட கதாபாத்திரத்தில் விமல் நடித்திருக்கிறார் என்பதை விட மாறுபட்ட நடிப்பை முதன்முறை யாக வழங்கி இருக்கிறார் எனலாம்.

கருணாஸுக்கு தனது வேனில் லிப்ட் கொடுக்கும் விமல் அவர் தரும் சிறு சிறு தொந்தரவுகளை தாங்கிக் கொள்ள முடியாமல் விமல் கடுப்பை காட்டுவதும்  பின்னர் அவருடன் இணக்கமாவதும் ரசனை. ஒரு கட்டத்தில் வேனில் கொண்டு சென்ற பெரியவரின் உடல் காணாமல் போனதும் அடுத்து விமல் என்ன செய்யப் போகிறார் என்ற பரபரப்பு கிளைமாக்ஸ் வரை பறக்கிறது.

ஒரு பக்கம் பிரசவத்திற்கு பணம் இல்லாமல் மனைவி மருத்துவ மனையில் கஷ்டப்படுவதும், இன்னொரு பக்கம் பெரியவரின் உடலை பறி கொடுத்துவிட்டு பரிதவிப்பதும், அடுத்தபக்கம் சம்பந்தப்பட்ட உறவினர்கள் விமலை தொலைபேசியில் அழைத்து டார்ச்சர் செய்வதுமாக மூன்று பக்கம் இடி வாங்கி தவிக்கும் விமல் மனம் நொந்து கதறும்போது இப்படிக் நடிப்பாரா என்று ஆச்சரியப்பட வைக்கிறார்.

கூத்து கலைஞராக கருணாஸ் நடித்திருக்கிறார். எதற்காகடா இந்த கதாபாத்திரம் என்று  கிளைமாக்ஸ் நெருங்கும்வரை மனதை உறுத்திக் கொண்டிருக்க கிளைமாக்சே அவரால் தான் நிகழப்போகிறது என்ற தெரியம்போது திக் என்றாகிறது.

சிவ கல்லாரி படத்தை தயாரித்திருக்கிறார்.

மைக்கேல் கே ராஜா மசாலா கலப்பில்லாமல் எதார்த்தமாக காட்சிகளை படமாக்கி யார் இந்த இயக்குனர் என்று திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

என் ஆர் ரகுநாதன் இசை டெமி சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு மீட்டருக்குள் கட்டுப்பட்டு காட்சிகளை கண்ணிலும் கருத்திலும் பதிய வைக்கிறது.

‘போகும் இடம் வெகு தூரமில்லை – எவ்வளவு தூரம்  வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம்.

Related posts

சன்னி லியோனின் தெறிக்கவிடும் ‘ ஓ மை கோஸ்ட்’ டீசர்!

Jai Chandran

ஷாருக்கின் ‘ஜவான்” படத்தின் முதல் பாடல் “வந்த எடம்”

Jai Chandran

அரசியல் பாதிப்பால் ’கோடியில் ஒருவன்’ விஜய் ஆண்டனி எடுக்கும் அதிரடி முடிவு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend