Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

2 காதலிகளை நிராகரித்த ஹீரோ

ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஏ.டி.ஆதிநாடார் தயாரிக்க விருது படத்தின் நாயகன் அட்சயன் ஹீரோவாக நடிக்க ஆ. ஆதவன் இயக்கியிருக்கும் படம் உலகநாதன்.இவரும் ஏற்கனவே விருதுப் படத்தை இயக்கியவர் ஆவார் .உலக நாதன் என்ற பெயரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் கிராமிய கதைய மைப்போடு காதலும், மோதலும் கலந்த அம்மா – மகன் சென்டிமெண்ட்டோடு கூடிய கதை. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மதுரை, மற்றும் ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நடந்தது.

நடிகர் கஞ்சா கருப்பு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோ அட்சயனுக்கு ஜோடியாக யோக தர்ஷினி, கிரேட்டா என்று இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கி றார்கள். ஹீரோவின் ‘அம்மாவாக விஜய் டி.வி.புகழ் சசிகலா நடித்தி ருக்கிறார். வில்லன்களாக கடற்கரை, நாகராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கதாநாயகன் முறையாக சிலம்பம் கற்றவர் என்பதால் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார். சார்லஸ் தனா இசையமைத் திருக்கும் இப்படத்தின் பாடல்களை சார்லஸ், ஆதிநாடார் ராமநாதன், ஆதவன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள் ஏ.டி.ஆதி நாடார் மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கும்இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு சண்டைப் பயிற்சி மற்றும் படத்தொகுப்பு ஆகியவற்றை ஆ. ஆதவன் கவனிக்கிறார். ‘இப்படத்தின் அனைத்துக் கட்டப்படப்பிடிப் புகளும் முடிவடைந்தது தமிழ்நாடு முழுவதும் படத்தை விரைவில் வெளியிட அனைத்து ஏற்பாடு களையும் செய்து வருகிறார்கள்

——– துளசி பப்ளிசிட்டீஸ் 9941594843-9500024843

Related posts

“வணங்காமுடி” படத்தில் 6 கெட்டப்பில் அரவிந்த் சாமி

Jai Chandran

தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆவது எப்படி ?

Jai Chandran

சிவா கொண்டு வந்த பொக்கிஷம் கங்குவா : சூர்யா பேச்சு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend