Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஹரா (பட விமர்சனம்)

படம்: ஹரா

நடிப்பு: மோகன், அனுமோல், யோகி பாபு, கௌசிக் ராம், அனிதா நாயர்,  சாருஹாசன், மொட்டை ராஜேந்திரன், சுரேஷ் மேனன் , வனிதா, மைம் கோபி, ஆதவன், சிங்கம் புலி, தீபா, மனோ பாலா,, சந்தோஷ் பிரபாகரன், சுவாதி

தயாரிப்பு: கோவை எஸ்பி மோகன்ராஜ்

இசை: ரசாந்த் அர்வின்

ஒளிப்பதிவு: பிரகத் முனிசாமி, மனோ தினகரன்

இயக்கம்: விஜய் ஸ்ரீ ஜி

பிஆர்ஓ: நிகில் முருகன்

பயணங்கள் முடிவதில்லை விதி, மெல்ல திறந்தது கதவு என 80, 90களில்  வெள்ளி விழா வெற்றி படங்களை வழங்கிய மோகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு  ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் படம் ஹரா.

தன் மகளை யாரோ கடத்தி கொலை செய்து விட்டார்கள் என்று ஆவேசப்படும் இப்ராஹிம் ( மோகன்) சம்பந்தப்பட்ட நபர்களை கண்டுபிடித்து சுட்டுத் தள்ள முடிவு செய்கிறார். ஒவ்வொருவரையாக அவர் கண்டுபிடித்து தீர்த்துக் கட்டும் நிலையில் போலீஸ் அவரை சுற்றி வளைக்கிறது போலீசில் இருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா, மகளை கடத்தியவர்கள் யார் என்ற பல கேள்விகளுக்கு ஹரா கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

திரையில் நடித்து வருடங்கள் 30 கடந்தும் இன்னமும் தனது உடல் தோற்றத்தை ஸ்லிம்மாக பராமரித்து வரும் மோகனை பாராட்டத்தான் வேண்டும். இளமை துள்ளலுடன் அந்த காலகட்டங் களில் நடித்த மோகன் இந்த படத்தில் பொறுப்பு மிக்க தந்தை யாக நடித்து அழுத்தமான உணர்வு களை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தன் மகளுக்கு என்ன ஆனது அவரை கடத்தி கொலை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க போலீஸ் தன்னைத் தேடும் நிலையிலும் வெளிப்படை யாக பஸ்ஸிலும் காரிலும் மோகன் பயணிப்பது திரில் அனுபவத்தை தருகிறது.

ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் சில்மிஷம் செய்யும் வாலிபரை சுட்டு தள்ளும் மோகன் அதிர்ச்சி ஏற்படுத்துகிறார். ஊர் முழுக்க தனது படத்தை ஒட்டி போலீஸ் தேடும் நிலைமையில் அவரே போலீஸ் நிலையத்திற்கு சென்று கேள்வி கேட்பது அடுத்து என்ன நடக்குமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

மகளை நினைத்து கண்ணீர் பெருக மோகன் அழும் காட்சிகளில் உணர்ச்சிகளை கொட்டி இருக்கிறார்.

மோகனின் மனைவியாக அனுமோல் எதார்த்தமாக நடித்து ஸ்கோர் செய்கிறார்.

மோகனின் மகளை காதலிக்கும் இளைஞனாக வரும் சந்தோஷ் பிரபாகரன் புதுமுகம் என்றாலும் பதட்டம் இல்லாமல் காட்சிக்கு என்ன தேவையோ அதை அளவுடன்   நடித்து மனதில்  இடம் பிடிக்கிறார். நடனம்,  சண்டைக் காட்சி இவருக்கு கிடைத்திருந்தால் அவரது திறமை இன்னும் வெளிப்பட்டிருக்கும். அடுத்தடுத்த படங்களில் அவரது திறமை மேலும் வெளிப்படும் என எதிர்பார்க்க லாம்.

படத்தில் யோகி பாபு வக்கீலாக வருகிறார். அவர் நடித்திருக்கும் காட்சி கதையோடு ஒட்டாத ஒரு துண்டு நகைச்சுவை காட்சியாக படமாகி இருப்பது பளிச்சென தெரிகிறது.

தாதா 87 இல் உட்கார்ந்த இடத்திலேயே மிரட்டிய சாரு ஹாசன் இப்படத்திலும் அந்த கதாபாத்திரத்தை தொடர்ந்திருக் கிறார். இதிலும்  உட்கார்ந்த இடத்திலேயே மிரட்டுகிறார்.

கள்ளத் துப்பாக்கி விற்கும்  நபராக வரும்  மொட்டை ராஜேந்திரன் தன் பங்கிற்கு சிரிப்பூட்ட முயற்சிக் கிறார்

இந்த கதையில் இல்லாத காட்சிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு கடத்தல், ஆக்சன், செண்டிமெண்ட், காமெடி, சஸ்பென்ஸ் என எல்லாம் கலந்த  கலவை சாதமாக  படத்தை இயக்கியிருக்கிறார் விஜய் ஸ்ரீஜி.

கோவை எஸ்பி மோகன்ராஜ் படத்தை தயாரித்திருக்கிறார்.

ரசாந்த் அர்வின் இசை, பிரகத் முனிசாமி, மனோ தினகரன்  ஒளிப்பதிவு ஒ கே ரகம்.

ஹரா – மோகனுக்கு மீண்டும் திரையுலகில்  வசந்த கால கதவு திறக்கும்

 

 

Related posts

director Steven Spielberg’s West Side Story teaser trailer and poster f

Jai Chandran

ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் குழு சந்திப்பு..

Jai Chandran

Trailer of AppathavaAattayaPottutanga

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend