Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

இங்கு நான் தான் கிங்கு (பட விமர்சனம்)

படம்: இங்கு நான் தான் கிங்கு

நடிப்பு: சந்தானம், தம்பி ராமையா, பிரியா லயா  பாலா சரவணன், விவேக் பிரசன்னா, முனீஸ் காந்த், சாமிநாதன்,  மனோபாலா, மாறன், சேஷு

தயாரிப்பு: கோபுரம் பிலிம்ஸ் ஜி என் அன்புச்செழியன்,  சுஷ்மிதா அன்பு  செழியன்

இசை: டி இமான்

ஒளிப்பதிவு: ஓம் நாராயண்

இயக்கம்: ஆனந்த் நாராயண்

பிஆர்ஓ: நிகில் முருகன்

90ஸ் கிட் சந்தானம் திருமணம் ஆகாமல் கிடக்கிறார்.  சொந்த வீடு, நல்ல சம்பாத்தியம் இருந்தால் தான் பெண் கிடைக்கும் என்று கூறியதால் அதையும் சம்பாதிக்கிறார். ஆனால் பெண் கிடைத்த பாடில்லை. பெண் பார்க்கும் புரோக்கர் மனோபாலா ஜமீன்தார் வீட்டு பெண் இருப்பதாக கூறி சந்தானத்தை அழைத்து செல்கிறார். ஜமீன்தார் பங்களாவில் முறைப்படி தடபுடலாக பெண் பார்க்கும் படலம் மற்றும் உடனடி திருமணமும் நடக்கிறது.  அதன் பிறகுதான் தெரிகிறது . பெண்ணின் தந்தை தம்பி ராமையா 10 கோடி ரூபாய் கடன் வாங்கி வெத்துவேட்டாக நிற்கிறார் என்ற விவரம். ஏற்கனவே வீடு வாங்குவதற்காக சந்தானம் 25 லட்சம் கடன் வாங்கி தவித்துக் கொண்டிருக்க தற்போது பத்து போடி  ரூபாய் கடனுடன் மாமனார் குடும்பமும் கூட சேர்ந்து கொண்ட  நிலையில் சந்தானம் என்ன செய்கிறார். இதற்கிடையில் அவர்கள் வீட்டில் வந்து இறக்கும் தீவிரவாதி உடலை வைத்துக் கொண்டு சந்தானம் கோஷ்டி என்ன பாடு படுகிறது என்பதை எல்லாம் கலகலப்பாக முழு படமும் வயிறு வலிக்க சொல்கிறது.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு இது ஒன்றுதான் இந்த படத்தின் நோக்கமாக இருக்கிறது. இதில் லாஜிக்கும் பார்க்க முடியாது மேஜிக்கும் பார்க்க முடியாது கூட்டமாக போனோமா சிரித்துவிட்டு வந்தோமா என்ற எண்ணத்தில் தான் இங்கு நான் தான் கிங்கு படத்துக்கு வரவேண்டும் . கனமான இதயத்துடன் வருபவர்கள் கூட சிரிச்சு சிரிச்சி லேசான மனதுடன் திரும்பிச் செல்லும் அளவுக்கு ஆக்சன் நகைச்சுவையை படம் முழுக்க அள்ளி  இறைத்திருக் கிறார் சந்தானம்.

பெண் பார்க்க செல்லும் இடத்தில் 2 5 லட்சம் வரதட்சணை கேட்க அதற்கு தந்தை 15 லட்சம் தான் தர முடியும் வேண்டுமானால் இன்னொரு பெண்ணையும் சேர்ந்து கட்டிக் கொள்ளுங்கள் 20 லட்சம் தருகிறேன் என்று சொல்ல இன்னும் ஐந்து லட்சத்துக்கு என்ன செய்வது என்று கேட்க  என் மனைவி தான் இருக்கிறார் என்று பதில் சொல்ல குடும்பமே  திரு திருவென  முழிக்கும்போது  அரங்கே அல்லோகல்லோ படுகிறது.

பெண்ணை கட்டி கொடுத்த கையோடு மாமனார் தம்பி ராமையா மச்சான் பால சரவணன் இருவரும் கூடவே சீதனம் போல் சந்தானம் வீட்டுக்கு வந்து தங்கி அடிக்கும் அரட்டைகள் அதைக் கண்டு கடுப்பாகி அவர்கள் இருவரையும் சந்தானம் திட்டி தீர்க்கும் காட்சிகள் அவ்வளவு திட்டையும் வாங்கிக் கண்டு எருமை மாட்டு மீது  மழை பெய்தது போல்  தம்பி ராமையாவும் பால சரவணனும் அங்கேயே பொழுதை கழிப்பது அடுக்குத் தொடர்  காமெடிகள்.

இந்த காமெடிக்கு எல்லாம் உச்சமாக வருகிறது விவேக் பிரசன்னா தீவிரவாதியாகவும், மேட்ரிமோனி நிர்வாகியாகவும் வந்து செய்யும் காமெடி.

சிரிச்ச மூஞ்சியோடு செத்துப் போகும் விவேக் பிரசன்னாவின் உடலை வைத்துக்கொண்டு 50 லட்சம் சன்மானம் பெறுவதற்காக சந்தான கோஷ்டி ஒரு பக்கம் முனுஷ்காந்த், மாறன் கோஷ்டி ஒரு பக்கம் என விவேக் பிரசன்னாவை கடத்திக் கொண்டும், தூக்கிக் கொண்டும், இழுத்துக் கொண்டும் செய்யும் ரகளை கிளைமாக்ஸ் வரை தொடர்கிறது.

புரோக்கராக வரும் மனோபாலா, செக்யூரிட்டடியாக வரும் சேசு இருவரும் மறைந்த நிலையில் அவர்களது கடைசி படமாக இப்படம் வந்திருக்கிறது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது போல். இறந்தும் ரசிகர்களை சிரிப்பில்  ஆழ்த்தியிருப்பது  அவர்களது நடிப்பின் அர்ப்பணிப்பை கை கூப்பி வணங்க வைக்கிறது..

கோபுரம் பிலிம்ஸ் ஜி என் அன்புச்செழியன்,  சுஷ்மிதா அன்பு செழியன் படத்தை தயாரித்திருக்கின்றனர்.

டி இமான் இசை சந்தானத்துக்கு புதிய பாதையை போட்டுத் தந்திருக்கிறது.  கானா பாடலிலேயே காலத்தை கழித்துக் கொண்டிருந்த சந்தானத்துக்கு மெலடி பாடல் ஒன்றையும் போட்டு கொடுத்து அவரை லவ்வபுல் ஹீரோவாகவும் மாற்றியிருக் கிறார் இமான்.

ஓம் நாராயண்பளிச்சென ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சந்தானத்துக்காகவே காட்சிகளை அமைத்து அதை பார்த்து ரசிகர்கள் வயிறு வலிக்க சிரிக்க வேண்டும் என்று படத்தை இயக்கியிருக்கும் ஆனந்த் நாராயண் முயற்சி பலன் கொடுத்திருக்கிறது.

இங்க நான் தான் கிங்கு –  நகைச்சுவையில் சந்தானம்தான் கிங் என மீண்டும்  நிரூபித்தி ருக்கிறார்.

 

 

 

 

Related posts

நேசிப்பயா’ விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் – விஷ்ணுவர்தன்

Jai Chandran

சிறு பட்ஜெட் படங்கள்: பத்திரிகையாளர் விழாவில் எஸ் ஏ சி வேண்டுகோள்

Jai Chandran

2nd song”SOODAANA from ‘Pushpa 2: The Rule’ OUT NOW*

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend