Trending Cinemas Now
Uncategorized

ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு இயக்குனர் இமயம் பாலச்சந்தரால் திரை உலகிற்கு  அறிமுகப்படுத்தப்பட்டார். அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் அவர் அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்கள் அவர் நடித்தாலும் தமிழ் திரையுலகில் அப்போது கமலஹாசன் தான் கொடிகட்டி பறந்து கொண்டு இருந்தார்.

1976 ஆம் ஆண்டு மூன்று முடிச்சு, 16 வயதினிலே, காயத்ரி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக அறிமுகமாகி மக்களின் பரிட்சயத்தை பெற்றார் ரஜினி. 16 வயதினிலே திரைப்படத்தில் ‘இது எப்படி இருக்கு’ என கவுண்டமணியை பார்த்து கேட்க,  ‘பத்தவச்சிட்டியே  பரட்டை’ என  கவுண்டமணி பதிலளிப்பதும் இப்போதும் மறக்க முடியாத வசனங்களாக நினைவில் உள்ளது.

ரஜினியும் கமலும் இணைந்து 18 திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் 13 திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஒரு சில திரைப்படங்களில் கௌரவ தோற்றத்தில் கமல் நடித்துள்ளார். 1980 காலகட்டத்திற்குப் பிறகு ரஜினியும் கமலும் தனித்தனியே நடிக்க முடிவு செய்து நடிக்க தொடங்கினர் அப்போது முதல் ரஜினியின் படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக அமைய தொடங்கியது. சரி தற்போது விஷயத்துக்கு வருவோம்

ரஜினிகாந்த் தனது 48 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 169 திரைப்படங்களை நடித்து முடித்துள்ளார் தற்போது லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில் ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் பெயரிடப்படாத  ‘தலைவர் 170’ திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலியில் ஷூட்டிங்:

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் உள்ள ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது இதற்காக ரஜினிகாந்த் கன்னியாகுமரியில் தங்கி இருந்து தினமும் பணகுடி வந்து படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நான்கு நாட்களாக படப்பிடிப்பு இங்கு நடந்து வரும் நிலையில், காலையில் இருந்தே அப்பகுதியில் சூப்பர் ஸ்டாரை காண ஏராளமான ரசிகர்கள் கூடுகின்றனர். காலையில் அவர் படப்பிடிப்புக்கு வரும்போதும் இரவில் படப்பிடிப்பு முடிந்து விடுதிக்கு திரும்பும் போதும் உற்சாகமாக கையசைத்து காரில் நின்றவாறு பொதுமக்களையும் ரசிகர்களையும் கைகூப்பி வணங்கி செல்கிறார் நாளுக்கு நாள் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

முகப்பு/செய்தி/பொழுதுபோக்கு/‘46 வருஷம் ஆச்சு’.. ரஜினிக்கும் திருநெல்வேலி மாவட்டத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி தெரியுமா?

‘46 வருஷம் ஆச்சு’.. ரஜினிக்கும் திருநெல்வேலி மாவட்டத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி தெரியுமா?

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் உள்ள ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது இதற்காக ரஜினிகாந்த் கன்னியாகுமரியில் தங்கி இருந்து தினமும் பணகுடி வந்து படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விளம்பரம்

  • 3-MIN READ
  • NEWS18 TAMIL
  • PUBLISHED BY : ARUN
  • LAST UPDATED : 
  • TAMIL NADU
ரஜினி

ரஜினி

விளம்பரம்

News18 Related Video Iconதொடர்புடைய வீடியோக்கள்

ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகளில்  ஒரே  நேரத்தில் படத்தை திரையிட்டது, அதிகாலை 4 மணிக்கு சிறப்பு  காட்சிகள், 3 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி படம் ஓடியது என பல்வேறு சாதனைகளுக்கு  திருநெல்வேலி மண்ணில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொந்தகாரராக திகழ்கிறார். ரஜினியின்  170 ஆவது திரைப்படம் திருநெல்வேலி மண்ணில் ஷூட்டிங் எடுக்கப்படும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் அவருக்குமான ஒரு பந்தம் குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டு இயக்குனர் இமயம் பாலச்சந்தரால் திரை உலகிற்கு  அறிமுகப்படுத்தப்பட்டார். அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் அவர் அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்கள் அவர் நடித்தாலும் தமிழ் திரையுலகில் அப்போது கமலஹாசன் தான் கொடிகட்டி பறந்து கொண்டு இருந்தார்.

விளம்பரம்

1976 ஆம் ஆண்டு மூன்று முடிச்சு, 16 வயதினிலே, காயத்ரி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக அறிமுகமாகி மக்களின் பரிட்சயத்தை பெற்றார் ரஜினி. 16 வயதினிலே திரைப்படத்தில் ‘இது எப்படி இருக்கு’ என கவுண்டமணியை பார்த்து கேட்க,  ‘பத்தவச்சிட்டியே  பரட்டை’ என  கவுண்டமணி பதிலளிப்பதும் இப்போதும் மறக்க முடியாத வசனங்களாக நினைவில் உள்ளது.

ரஜினியும் கமலும் இணைந்து 18 திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் 13 திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஒரு சில திரைப்படங்களில் கௌரவ தோற்றத்தில் கமல் நடித்துள்ளார். 1980 காலகட்டத்திற்குப் பிறகு ரஜினியும் கமலும் தனித்தனியே நடிக்க முடிவு செய்து நடிக்க தொடங்கினர் அப்போது முதல் ரஜினியின் படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக அமைய தொடங்கியது. சரி தற்போது விஷயத்துக்கு வருவோம்.

ரஜினிகாந்த் தனது 48 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 169 திரைப்படங்களை நடித்து முடித்துள்ளார் தற்போது லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில் ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் பெயரிடப்படாத  ‘தலைவர் 170’ திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலியில் ஷூட்டிங்:

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் உள்ள ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது இதற்காக ரஜினிகாந்த் கன்னியாகுமரியில் தங்கி இருந்து தினமும் பணகுடி வந்து படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நான்கு நாட்களாக படப்பிடிப்பு இங்கு நடந்து வரும் நிலையில், காலையில் இருந்தே அப்பகுதியில் சூப்பர் ஸ்டாரை காண ஏராளமான ரசிகர்கள் கூடுகின்றனர். காலையில் அவர் படப்பிடிப்புக்கு வரும்போதும் இரவில் படப்பிடிப்பு முடிந்து விடுதிக்கு திரும்பும் போதும் உற்சாகமாக கையசைத்து காரில் நின்றவாறு பொதுமக்களையும் ரசிகர்களையும் கைகூப்பி வணங்கி செல்கிறார் நாளுக்கு நாள் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

விளம்பரம்

திருநெல்வேலியில் ரஜினி

இந்த நிலையில் 1977 ஆம் ஆண்டு திரைக்கு வந்த  ‘புவனா ஒரு கேள்விக்குறி’ திரைப்படம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் பெருமளவு படமாக்கப்பட்டது. அந்த திரைப்படத்தில் நடிக்க வந்த பிறகு 46 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ரஜினிகாந்த் கன்னியாகுமரி – திருநெல்வேலி மாவட்டங்களுக்கு வருகை தந்துள்ளார். இதனை படப்பிடிப்புக்கு நடுவே இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கும் ரஜினியே  அங்கிருந்த சினிமா துறையினரிடம்  தெரிவிக்கும் காட்சிகளும் வெளியாகி இருக்கிறது.

ரஜினியின் தீவிர ரசிகர்கள் அவர் காரை வழிமறித்து அன்பின் வெளிப்பாடு காரணமாக அவருடன் செல்பி எடுத்து மகிழும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் படப்பிடிப்பு முடிவடைந்து, திருநெல்வேலி ரயில் நிலையம் வந்து அருகில் உள்ள உணவு விடுதியில் உணவருந்தி விட்டு ரயில் மூலமாக சென்னை சென்றிருக்கிறார். இதனை திருநெல்வேலி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராக உள்ள பானு சேகர் நினைவு கூறினார்.

46 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்துள்ள போதிலும் அவருக்கும் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் பல்வேறு நெருக்கமான விஷயங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா திரைப்படம் தான் திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் முதலில் 100 நாட்கள் ஓடிய திரைப்படமாக இருக்கிறது. 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாது தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோவில் ஆகிய இடங்களிலும் 100 நாட்களை கடந்து ஓடி இருக்கிறது.

தற்போது ஒரு திரைப்படம் ஒரே நேரத்தில் பல திரையரங்குகளில் வெளியாவது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் பல திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடப்பட்டாலும்  கூட திருநெல்வேலி போன்ற நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகளில்  ரஜினிகாந்த் திரைப்படங்களை முதல் முதலாக திரையிடப்பட்டது.  1983 ஆம் ஆண்டு வெளிவந்த அடுத்த வாரிசு திரைப்படம் திருநெல்வேலியில் சென்ட்ரல், பாப்புலர் ஆகிய இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அந்த காலங்களில் திரைப்படச் சுருள் மூலமாக திரைப்படங்கள் திரையிடப்படும் நிலையில் ஒரே நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்த இரண்டு திரையரங்குகளில் 30 நிமிடங்கள் இடைவெளியில் அடுத்த வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டது.

வெவ்வேறு பிரிண்டுகளை வைத்தும் இரண்டு திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடப்பட்டதும் ரஜினி திரைப்படம் தான். 1995 ஆம் ஆண்டு முத்து திரைப்படம் திருநெல்வேலி கணேஷ் மற்றும் பேரின்ப விலாஸ் ஆகிய இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டது இரண்டிலும் 100 நாட்கள் இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது.

அதிகாலை 4 மணி காட்சி

தற்போது அரசின் அனுமதியுடன் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறது. ஒரு சில திரைப்படங்களுக்கு இதற்கான அனுமதி கிடைக்கிறது. ஒரு சில திரைப்படங்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால் அந்த சாதனையையும் திருநெல்வேலி மண்ணில் முதல் முதலாக நிகழ்த்தியது ரஜினிகாந்த் திரைப்படம் தான். 1991 ஆம் ஆண்டு  நெல்லையில் உள்ள பேரின்பவிலாஸ் திரையரங்கில் அதிகாலை 3:30 மணிக்கு தளபதி திரைப்படம் திரையிடப்பட்டது.

இவ்வாறு பல்வேறு சாதனைகளை திரைத்துறையில் செய்து வந்துள்ள ரஜினிகாந்த் ஒரே நேரத்தில் சிவாஜி திரைப்படத்தை மூன்று திரையரங்குகளில் திரையிடப்பட்டு அது வெற்றியும் கண்டது திருநெல்வேலியில் உள்ள பேரின்பவிலாஸ், ராம், பாம்பே ஆகிய மூன்று திரையரங்குகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.

தற்போது பெயரிடப்படாத இந்த 170  வது திரைப்படம் கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்க்கை முறை குறித்தும் அவர்களை அதிலிருந்து மீட்கும் முயற்சியாகவும் அமைந்துள்ள திரைப்படம் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்த திரைப்படம் வெளியாகும் என கூறப்படும் நிலையில் ரஜினிக்கும் திருநெல்வேலி மாவட்டத்திற்கும் பந்தம் என்றும் விட்டுப் போகாது. இந்த திரைப்படமும் சாதனை திரைப்படமாக அமையும் என்றால் அது மிகையல்ல

Related posts

‘ஈமெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அமீர்

Jai Chandran

இசை அமைக்க பணம் வேண்டாம் என்ற கார்த்திக்ராஜா

Jai Chandran

Prabhu Deva 54 FirstLook Tomorrow at 5pm

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend