Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டீமன் (பட விமர்சனம்)

படம்: டீமன்

நடிப்பு: சச்சின், அபர்நிதி,  கும்கி அஸ்வின்,  ஸ்ருதி, கே பி ஒய்.பிரபாகரன்,  ரபினா தாஹா, நவ்யா சுஜி,  தரணி , அபிஷேக்

தயாரிப்பு: ஆர்.சோமசுந்தரம்

இசை: ரோன்னி ரபேல்

ஒளிப்பதிவு: ஆர்.எஸ்.ஆனந்த குமார்

இயக்கம்: ரமேஷ் பழனிவேல்

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா , ரேகா (D one)

சினிமா இயக்குனர் ஆகும் எண்ணத்துடன் உள்ள சச்சின் தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து பேய் கதை சொல்கிறார். அது பிடித்துவிடவே தயாரிக்க சம்மதிக் கிறார். கதை விவாதம் செய்து ஸ்கிரிப்ட் ரெடி செய்ய அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகிறார் சச்சின். அந்த வீட்டில் அமானுஷ்யம் நிகழ்கிறது. பயங்கரமான பேய் கனவு வந்து சச்சினை மிரட்டுகிறது. ஒரு கட்டத்தில் பைத்தியம் போல் வீதிகளில் அலைகிறார். அவரை நண்பர்கள் மீட்டு டாக்டரிடம் காட்டுகின்றனர். அவர் சில அறிவுரைகள் கூறுகிறார். தன் வீட்டில் இருக்கும் மர்மம் என்ன என்பதை அறிய உயிருக்கு துணிந்து சச்சின் கண்டுபிடிக்க முயல்கிறார். அப்போதுதான் அந்த வீட்டில் அதற்கு முன் வாழ்ந்த வர்கள் . தற்கொலை செய்து இறந்தது தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் பேய் குடும்பத்தில் சச்சின் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து அவரால் மீண்டு வர முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

வட நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து  இந்த கதை அமைக்கப்பட்டிருக் கிறது. கதை  என்னவோ வழக்க மான பேய் கதைதான் ஆனால் அதை சொல்லியிருக்கும் விதம்தான் த்ரில்.

அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் சச்சின் நுழையும் போதே பேய் வீடு என்று சிக்னல்  காட்டுவது அச்சம் துளிர் விடுகிறது.

சச்சின் தனியாக வீட்டில் தங்கியிருக்கும்போது பேய் காட்டும் பயங்களை தனது உதவி இயக்குனர்கள் அத்தனை பேர் இருந்தும் அவர்களிடம் தனக்கு பேய் காட்டும் பயத்தை    முதல் பாதி படம் வரை ஹீரோ சச்சின் பகிர்ந்து கொள்ளாதது போல்  காட்டுவதும்,  ஒருவரைக் கூட தன்னுடன் துணைக்கு இருக்கும் படி கேட்காததும் ஏன் என்றுதான் தெரியவில்லை.  முதல் பாதி இப்படிப்பட்ட கேள்விகளுடன்தான் நகர்கிறது. இடை வேளைக்கு பிறகு பேயின் அட்டகாசம் அதிகரிக் கிறது.

ஒரு குடும்பமே பேயாக வந்து சச்சினை பயமுறுத்துவதுடன் அவரை அறைக்குள் தனியாக சிக்க வைத்து தங்கள் குடும்பம் தற்கொலை செய்ததற்கான காரணத்தை டிவி ஷோபோல் காட்டுவது வித்தியாசம். ஆனால் எந்த ஊர் பேய்  இப்படி படம் காட்டுகிறது என்றுதான் தெரியவில்லை.

பேய் பயத்துக்கிடையே சச்சின், அபர்நிதா காதல் விளையாட்டு ரிலாக்ஸ்

ஆர்.சோமசுந்தரம் தயாரித்திருக் கிறார். ரோன்னி ரபேல் இசை மீட்டரில் உள்ளது.

ஆர்.எஸ்.ஆனந்த குமார் ஒளிப் பதிவு நார்மல்

புது இயக்குனர்  ரமேஷ் பழனி வேல்  மினிமம்  கேரண்ட்டி ஹாரர் ஜானரில் என்ட்ரி கொடுத்து இயக்குனர் லிட்டில்  சீட்டை  ரிசர்வ் செய்துகொண்டிருக்கிறார்.

டீ மன் – பயமுறுத்தல்.

 

 

 

 

 

 

Related posts

The IPL – Lalit Modi Saga by Boria Majumdar

Jai Chandran

திரையுலகம் திரண்ட ‘காளிதாஸ் 2’ பட இசை வெளியீட்டு விழா..

Jai Chandran

யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend