Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஐமா (பட விமர்சனம்)

படம்: ஐ மா

நடிப்பு: யூனஸ் ,எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு,  மனோகரன், சண்முகம் ராமசாமி,

தயாரிப்பு: சண்முகம் ராமசாமி

இசை: கே ஆர்.ராகுல்

ஒளிப்பதிவு: விஷ்ணு கண்ணன்

இயக்கம்: ராகுல் ஆர்.கிருஷ்ணா

பி ஆர் ஒ: சக்தி சரவணன்

ஆதாம் (யூன்ஸ்) தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை மருத்துவமனையில்  சேர்க்கிறான். அதேபோல் விபத்தில் சிக்கிய மரியா (எல்வின் ஜூலியட் ) அதே மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்கிறாள்.  ஒரு  கட்டத்தில் இவர்கள் இருவரையும் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கின்றனர். கை கால் கட்டப்பட்டு கிடக்கும் அவர்கள் ஒரு வழியாக அதிலி ருந்து மீண்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயல்கின்றனர். ஆனால் இவர்கள் இருவரையும் கடத்தி வரும் பேர்விழி ரகசிய திட்டம் தீட்டியிருக்கிறான்.  அதற்காக  இருவரையும்  சித்ரவதை செய்கி றான். இருவரையும் ஏன் கடத்தி னான், கடத்தல்காரனின் திட்டம் என்ன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

ஐ மா என்றால் கடவுள் சக்தி என்றும் பொருளாம்

திரில்லர் படம் என்ற சமிக்ஞை படத்தின் தொடக்கத்திலேயே தெரிகிறது. பேய் படமாக இருக்கு மோ என்று யோசிக்க வைத்து மெல்ல, மெல்ல சைன்ஸ் பிக்ஷனாக மாறுகிறது.

அண்ணன் – தங்கை பாசம், அம்மா -மகன் பாசம் என்று காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஹீரோ யூனுஸ் கைகால்கள் கட்டப்பட்டு தனி அறையில் கிடப்பது  அதிர்ச்சி மாற்றம்.

அசப்பில் விஜய் போலவே தோன்றும் யூனுஸ் சில சீன்களில்  விஜய் போலவே மேனரிசம் செய்து  ஜூனியர் விஜய்யை பார்த்ததுபோல ஒரு ஃபீல் வரச் செய்கிறார்.

ஹீரோயின்  எல்வின் ஜூலியட் திடீரென்று ஆக்ஷன் காட்சியில் இறங்குவது ஆச்சர்யம்.

தப்பிக்க முயல்வதற்கான க்ளு கண்டுபிடிக்க ஹீரோவை நச்சென்று லிப்  டூ  லிப் கிஸ் கொடுத்து  சடன் கிக் ஏற்றுகிறார் ஜூலியட்.

யாருமே இல்லாத இடம்போல் சஸ்பென்சாக காட்சி செல்லும் போது திடீரென்று வில்லன்  என்ட்ரி, அடியாட்கள்  என்ட்ரி எல்லாம் சஸ்பென்சை  நீர்த்துப் போகச் செய்கிறது.

வில்லனாக வரும் சண்முகம் ராமசாமி வித்தியாசமான கெட்டப்பில் வரும் அளவுக்கு நடிப்பிலும் இன்னும்  வித்தியாசம் காட்டியிருக்கலாம். .  “இவன் அவனில்லை அவ இவனில்ல” என்ற பாணியில் ஒரு வசனம் பேசி  பொடி வைக்கிறார் வில்லன் சண்முகம்.

கே ஆர்.ராகுல் இசையில் படத்தில் மொத்தம் பத்து பாடல்கள் பெறு கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லரில் 10 பாடலா என்றால் ஆமாம் 10 பாடல் தான். கிளைமாக்ஸ் முடிந்த பிறகும் திரையில் பாடல் தொடர்கிறது.

விஷ்ணு கண்ணன் குறுகிய அறையில் காட்சிகளை சுழன்று படமாக்கியிருக்கிறார்.

ராகுல் ஆர்.கிருஷ்ணா  ஹாலிவுட் சைன்ஸ் பிக்ஷன் பாணியில் கதையை சொல்ல முயன்றிருக் கிறார். ஆனால் சின்ன படேஜிட்டில் இந்த முயற்சியை செய்யாமலிருந் திருக்கலாம்.  காட்சிகளில்  இன்னும்  கூட விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம்.

ஐமா  –  சர்வைவல் சஸ்பென்ஸ்.

Two And A Half Star Rating Illustration Vector

 

 

Related posts

பேட்டரி பட டிரெய்லர், ஆடியோ வெளியீடு

Jai Chandran

பெரியார் நகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதியில் கமல் நிவாரண பொருள் வழங்கினார்..

Jai Chandran

எலக்சன் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend