Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஷாருக் ‘ஜவான்’ முதல் நாள் 129.6 கோடி வசூல் சாதனை

ஷாருக்கானின் ‘ஜவான்’, இந்தி திரையுலக வரலாற்றில் முதல் நாள் வசூலில் 129.6 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையை பதிவு செய்திருக்கிறது.

ஷாருக்கானின் நடிப்பில் தயாராகி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமான ஜவான், உண்மையில் ஒரு திருவிழாவாக வெளியாகி இருக் கிறது. இப்படத்தின் வெளியீட்டை திரையரங்குகளுக்கு வெளியே பலத்த ஆரவாரம் மற்றும் நடனத் துடன் மைதானங்களைப் போல் மாற்றி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆக்சன் என்டர்டெய்னருக்கு இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத வகையில் ஷாருக் கானின் மேஜிக் பார்வையாளர்களின் இதயங் களை வென்றிருக்கிறது. இதன் விளைவாக ‘ஜவான்’ வெளியான முதல் நாளில் 129.6 கோடி ரூபாயை வசூல் செய்து, புதிய சாதனையை படைத்தது. இதன் மூலம் உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸில் ஷாருக்கான் மீண்டும் கால் பதித்துள்ளார்.

ஷாருக்கான் – ரசிகர்களின் மற்றும் பார்வையாளர்களின் இதயங் களை வென்று, பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைப்பார் என்பது ஜவான் படத்திற்கான முன்பதிவு மூலமே தெரிய வந்தது. இந்நிலை யில் இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அனைத்து சாதனை களையும் முறியடிக்கும் என முன்பே கணிக்கப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே ‘ஜவான்’ அனைவரின் கணிப்புக்கும் அப்பாற்பட்டு 129.6 கோடி ரூபாய் வசூலித்து உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் அற்புதமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுவரை எந்த இந்திய படத்திற்கும் கிடைக் காத மிகப்பெரிய ஓப்பனிங் …இந்த ஜவான் படத்திற்கு கிடைத்திருக் கிறது. மேலும் இந்தி திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய தொடக்க நாள் வசூல் சாதனையும் ஜவான் பதிவு செய்துள்ளது.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப் பாளராக பணியாற்றியுள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்கு களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

Related posts

அதிதி பாலன் நடிப்பு; தங்கர்பச்சான் புகழ்ச்சி

Jai Chandran

ஆதிபுருஷ் 3டி ஆக்‌ஷன் படத்தில் பிரபாஸ்.. 5 மொழியில் உருவாகிறது

Jai Chandran

National Award Winning Editor For Silambarasan’s PathuThala

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend