Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நூடுல்ஸ் (பட விமர்சனம்)

படம்; நூடுல்ஸ்

நடிப்பு: ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், அருவி மதன், ஆழியா, திருநாவுக்கரசு, ஹரிதா,  வசந்த் மாரிமுத்து, பிரகாஷ், இம்தியாஸ்,, சோபன் மில்லர்

தயாரிப்பு: அருண் பிரகாஷ்

இசை: ராபர்ட் சற்குணம்

இயக்கம்: மதன் தட்சணாமூர்த்தி

பி ஆர் ஒ: ஏ.ஜான்

வெளியீடு: வி ஹவுஸ் புரடக்ஷன் சுரேஷ் காமாட்சி

நடுத்தர.குடும்பத்தை சேர்ந்த ஹரிஷ், அவர் மனைவி ஷீலா மற்றும் மேல்  மாடியில் குடியிருப்ப வர்கள் மொட்டை மாடியில் இரவில் ஒன்றாக அமர்ந்து பாட்டுப்பாடி விளையாடிக் கொண்டிருக்கின் றனர். அந்த தெரு வழியாக வரும் போலீஸ், சத்தம் கேட்டு அவர்களை அமைதியாக.இருக்கச் சொல்லி எச்சரிக்கிறார். இது வாக்குவாத மாகி கைகலப்பாகி விடுகிறது. அவர்களை வஞ்சம் தீர்க்க இன்ஸ்பெக்டர்.முடிவு செய்கிறார். இதற்கிடையில் ஷீலாவின் குழந்தை வைத்திருக்கும்  செல்போனை திருட முயலும் ஒருவரை ஷீலா இழுத்து தள்ள அந்த நபர் ஷீலா வீட்டுக்குள். விழுந்து இறக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் ஷீலா, ஹரிஷ் தவிக்கும்போது அங்கு போலீஸ் வருகிறது. அதன் பிறகு  நடப்பது என்ன என்பதற்கு  த்ரில்லாக படம் பதில் அளிக்கிறது.

சில  கதைகள் தலையை சுற்றி மூக்கை தொடும்,, சில கதைகள் நேராகவே மூக்கை தொடும் அந்த வகையில் நூடுல்ஸ் நேரடியாக கதைக்குள் இறங்கும் ரகம்.

மொட்டை மாடியில் சிலர் இரவு நேரத்தில் சத்தமாக கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தூக்கத்தை கெடுப்பது போல்தான் ஹரிஷ், ஷீலா குடும்பத்தினர் பாட்டுபாடி ஆட்டம்போடுகின்றனர். அவர் களை அமைதியாக இருக்கச் சொல்ல போலீஸ் கான்ஸ்ட்ஸ்பில் வருகிறார். இதில் வாய் தகராறு  ஏற்பட்டு பிரச்னையாகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் அந்த குடும்பத்தை எந்த நேரத்தில் என்ன் செய்வாரோ என்ற பதற்றம் காட்சிகளை வேகமாக நகrரத்து கிறது.

வீட்டில் ஒருவன் பிணமாக கிடக்கி றான் என்று ஷீலா சொன்னதும் அதைக்கேட்டு ஷாக் ஆகும் ஹரிஷ் அடுத்து என்ன செய்யப்போகிறா ரோ என்ற பரபரப்பு மற்றொரு புறம்  பற்றிக் கொள்கிறது.

நடந்த விஷயத்தை வக்கீலிடம் சொல்லி அவரிடம் உதவி கேட்கச் செல்லும் ஹரிஷ் அவரை தன் வீட்டுக்கு அழைத்து வந்து காட்டியதும் வீட்டில் ஒருவன்  பிணமாக கிடப்பதை பார்த்து வக்கீல் நடுங்கிப்போவது குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. இந்த சிரிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் வீட்டுக்குள் விசாரணை நடத்த என்ட்ரி கொடுத்தபிறகு டபுள் ஆகிறது.

இதற்கு மேல் இதில் உள்ள சஸ்பென்சை கூறுவது சுவாரஸ்யத்தை குறைத்துவிடும்.

பல படங்களில் தந்தை, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும்  அருவி மதன் தட்சிணாமூர்த்தி  இப்படத்தை இயக்கியிருக்கிறார். நல்ல குணசித்திர நடிகர் என்று நிரூபித்தவர் இப்படம் மூலம் சுவாரஸ்யமான இயக்குனர்  எனவும் நிரூபித்திருக்கிறார்.

:அருண் பிரகாஷ் தயாரித்தி ருக்கிறார்.

ராபர்ட் சற்குணம் மெல்லிய  இசை மென்மை.

நூடுல்ஸ் – குடும்பத்தோடு சிரித்துவிட்டு. வரலாம்.

 

 

 

 

Related posts

சுசீந்திரன் இயக்கத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி

Jai Chandran

பாலகிருஷ்ணாவின் #NBK111 பிரமாண்ட தொடக்கம் !!

Jai Chandran

5 இயக்குனர்கள் இயக்கிய 5 கதைகள் “வவுல்ஸ் “..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend