Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நகைச்சுவை நடிகர் ஆர்.எஸ் சிவாஜி திடீர் மரணம்

கடந்த 1981ஆம் ஆண்டு‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.எஸ். சிவாஜி.

இவர் அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம்,. கார்க்கி விக்ரம், சமீபத்தில் வெளியான லக்கி மேன் உள்ளிட்ட  நூற்றுக்கணக்கன  படங் களில் நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
நேற்று சென்னை உலக சினிமா விழாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.சிவாஜி கலந்து கொண்டிருந்தார்.  இந்நிலையில் இன்று அவர் திடீர் மரணம் அடைந்தார். இது அவரது ரசிகர்களையும் திரையுலகினரை யும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த ஆர்.எஸ்.சிவாஜிக்கு 66 வயது.

அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ஜனகரா ஜுடன் சேர்ந்து இவர் பேசும் ‘எங்கேயோ போய்ட்டீங்க சார்’ என்ற வசனம் மிகவும் பிரபலம்.

கமல்ஹாசனின் பல படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி. நெல்சன் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் அப்பா வாக நடித்திருந்தார். 2021ஆம் ஆண்டு சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ படத்தில் சாய் பள்ளவியின் தந்தையாக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும் மறைந்த ஆர்.எஸ். சிவாஜி நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ். சிவாஜி உடலுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தெந்நிதிய நடிகர் சங்க தலைவர் நாசர்  வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியதாவது:

தமிழ் திரைப்படத்துறையில் பிரபலமாக இருந்த தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்.எஸ்.சிவாஜி. தன்னுடைய 66 வயதில்  உயிரிழந் தார். இவர் மது மலர், மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், அபூர்வ சகோதரர்கள், குணா, வியட்நாம் காலனி, பவித்ரா, வில்லன், அன்பே சிவம், கோலமாவு கோகிலா மற்றும் கார்க்கி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் முக்கிய வேடங்களிலும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். சின்னத்திரைகளில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இணையதள தொடரிலும் நடித்து வந்துள்ளார். தன்னுடைய எதார்த்தமான நேர்த்தியான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.  01.09.23 மாலை நடந்த உலக சினிமா விழா துவக்க விழாவில்  கலந்து கொண்ட அவர் திடீர் என  மறுநாள் உயிரிழந் துள்ளது ஒட்டுமொத்த திரையுலகி னரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அன்னாரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வ தோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகி றோம்.

#தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் எம்..நாசர்

 

Related posts

விவேக் நினைவு நாளன்று வேகமெடுத்த கிரீன் கலாம்..

Jai Chandran

தமன் நடிக்கும் ‘ஜென்ம நட்சத்திரம்’ இசை வெளியீடு

Jai Chandran

My Wife Is My Backbone:Actor Nasser

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend