Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கிக் (பட விமர்சனம்)

படம்: கிக்

நடிப்பு: சந்தானம், தான்யா ஹோப், ராகினி திவேதி,  கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா முத்துக்காளை, மனோ பாலா, கிங்காங், கிரேன் மனோகர்.

தயாரிப்பு;  நவீன்ராஜ்

இசை: அர்ஜுன் ஜான்யா

ஒளிப்பதிவு: சுதாகர் ராஜ்

இயக்கம்: பிரசாந்த் ராஜ்

பி ஆர் ஒ: ஜான்சன்

கம்பெனி விளம்பர படம் எடுக்க ஆர்டர் பிடிப்பதில் சந்தானம், தான்யா , மன்சூர் அலிகான் மூவருக்கிடையே  போட்டி ஏற்படு கிறது. சந்தானம் வேகமாகவும் சாதுர்யமாகவும் செயல்பட்டு  ஆர்டர்களை பிடிக்கிறார். இதனால் தன்யாவும் மன்சூரும் காண்டாகி அவரை பழிவாங்க எண்ணுகின் றனர். இல்லாத ஒரு பொருள் இருப்பதாக விளம்பரம் செய்து  ஏமாற்றி மக்களிடம் கோடிக் கணக்கில் பணம் வாங்குவதாக சந்தானம் மீது  தான்யா கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார். அதை எதிர்கொள்ள  குறிப்பிட்ட ஒரு பொருளை தயாரிக்க விஞ்ஞானி யை தேடி செல்கிறார் சந்தானம். மேலும் தான்யா மீது காதலும் கொள்கிறார் இதன் முடிவு என்ன என்பதை. ஜாலியாக  படம் சொல்கிறது.

சந்தானம்  தனது கவுன்டர் மழையை சீனுக்கு சீன் கொட்டி கலகலக்க வைக்கிறார். தொடக்க காட்சியி லேயே மன்சூர் கூட்டத் துடன் ஆக்ஷன் காட்சியில் என்ட்ரி தருகிறார்.

“போன்ல தலையாட்டாமல் பேசு சிக்னல் கட்டாகுது” என்று மன்சூருக்கும்  ஒரு கவுன்ட்டரை சந்தனத்தால்தான் போட முடிகிறது.

தம்பிராமையா மைக்கேல் ஜாக்சன் ரசிகராக வந்து  சந்தானத்தின் கலாய்க்குள்ளாகி பல்ப் வாங்குவது சிரிப்பு.

சூப்பர் பிகர் என்று ரசிகர்களை  ஜெள்ளுவிட வைக்கும் டாப் டக்கர் பிகராக வருகிறார் தான்யா ஹோப்.  சந்தானத்துக்கும் அவருக்கும் நடக்கும் காதலும் மோதலும் சுவாரஸ்யம்.

விஞ்ஞானி பிரமானந்தத்தை சந்திக்க சந்தானம் பாங்காக் சென்றபிறகு காமெடி இன்னும் தூக்கலாகி விடுகிறது. சிறுவயது காதலி பற்றி பிரமானந்தத்திடம் கூறி அவரை வளைத்துபோடும் சந்தானம் தன்னை தேடி வரும் தான்யாவிடம், தான் பிரமானந் தத்தின்  மகன் என்று சொல்லி  அவருக்கு காதல் வலை விரிப்பது மாக பல தில்லாலங்கடி வேலை களை காட்டுகிறார் சந்தானம்.

போதாக்குறைக்கு மன்சூர் அலிகான் தொடங்கி  கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா முத்துக்காளை, மனோ பாலா, கிங்காங், கிரேன் மனோகர் என எல்லோருமே தங்கள் பங்கிற்கு கலகலக்க வைக்கின்றனர்.

நவீன்ராஜ் தயாரித்திருக்கிறார்.

அர்ஜுன் ஜான்யா இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு கலர்புல்

சென்டிமென்ட் என்று எந்த அழுகாச்சியையும் கொண்டு வராமல் 100 சதவீதம் பொழுது போக்கு படமாக இயக்கியிருக் qறார்  பிரசாந்த் ராஜ். ஆனால் சில இடங்களில்  டபுள் மினிங் வசனங்கள் நெளிய வைக்கிறது

கிக்-  லாஜிக் பார்க்காமல் சென்றால் கவலை மறந்து  சிரித்து விட்டு வரலாம் .

 

Related posts

Don’t Move – Will Move you for Sure!

Jai Chandran

Ammu Abhirami in full of excitement for Yaanai teaser

Jai Chandran

Team #LIGER wrapped up the entire shoot

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend