Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கிரான் டரிஸ்மோ (GRAN TURISMO) விமர்சனம்

பாலிஃபோனி டிஜிட்டலால் உருவாக்கப்பட்ட  வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்ட  கார் ரேஸ் திரைப்படம் கிரான் டரிஸ்மோ.

ஜான் மார்டன்பரோ என்ற இளைஞரின் உண்மைக் கதை.ப டத்தில் இந்த கதாபாத்திரத்தில். ஆர்ச்சி மேடெக்வே நடித்திருக் கிறார்.

வீடியோ கார் ரேஸ் கேம் விளையாடியவர் உலகின் மிகப் பெரிய  கார் ரேசில் வெற்றி பெற  முனைகிறார். ஆனால் யாரும் அவரை சேர்க்க மறுக்கிறார்கள்.  அவர் எப்படி நிஜ கார்  ரேசில் பங்கேற்று வெற்றி பெறுகிறார் என்பதை விறுவிறுப்புடன் கிளைமாக்ஸ் கூறுகிறது.

தனியாக உழைத்தால் .கிடைக்கும் வெற்றியைவிட அணியாக சேர்ந்து உழைத்தால்  வெற்றி நிச்சயம் என்பதே இதன் கரு. போட்டியில் வெற்றி பெற துடிக்கும் ஆர்ச்சிக்கு தோல்வியுற்ற முன்னாள் ரேஸ்-கார் டிரைவர் டேவிட் ஹார்பர் மற்றும் மோட்டார்ஸ்போர்ட் மெக்கானிக் ஆர்லாண்டோ ப்ளூம் கைகொடுக் கின்றனர். அவர்களின் துணை யுடன் உலகின் மிக பெரிய கார் ரேசில் ஆர்ச்சி பங்கேற்று ஜெயிப்பது த்ரில்.

ஆற்றல் நிரம்பிய ஆக்‌ஷன் த்ரில்லரான இப்படம் ஒருவர் தொடர்ந்து  முயற்சி செய்து இலக்கை நோக்கிச் சென்றால் அதை சாத்தியமாக்க முடியும்.  முயன்றால் முடியாதது எதுவு மில்லை என்பதை  உணர்த்துகிறது.

படத்தில் இடம்.பெறும் கார் ரேஸ் காட்சிகள் மெய்மறக்கச் செய்து எப்படியும் ஆர்ச்சி வென்றாக வேண்டும் என்ற உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது. தடைகளை தாண்டி வென்றால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறெதிலும்.கிடைக்காது அப்படியொரு மகிழ்ச்சி  படம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும்  ஏற்படச் செய்து விடுகிறார் இயக்குனர்  நீல் ப்லோம்காம்ப்.

டேரன் பார்னெட், ஜெரி ஹாலிவெல் ஹார்னர் மற்றும் டிஜிமோன் ஹவுன்சோ ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜாக்கியுயெஸ் ஜோப்ரெட் (Jacques Jouffret) ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லோர்ன் பால்ஃப் மற்றும் ஆண்ட்ரூ காவ்சின்ஸ்கிஇசை அமைத் துள்ளனர்.

சோனி பிக்சர்ஸ் ரிலீஸ் செய்துள்ளது.

இப்படம் பெல்ஜியத்தில் உள்ள சர்க்யூட் டி ஸ்பா-ஃபிரான்கார் வளாகத்தில்  திரையிடப்பட்டது.

 

 

Related posts

Pannikutty: Yogi Babu and Karunakaran in the lead roles.

Jai Chandran

’சாதாரணமாக போட வேண்டாம் எடை. வேதனைக்கெல்லாம் காலம் கூறும் விடை’ அரசுக்கு இயக்குனர் டி.ராஜேந்தர் சரமாரி கேள்வி..

Jai Chandran

நடிகர் வீரமணி கொரோனா பாதித்து மரணம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend