Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஹர்காரா ( பட விமர்சனம்)

படம்  : ஹர்காரா

நடிப்பு: ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட்,  கவுதமி சவுத்ரி, பிச்சைக்காரன் மூர்த்தி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்,    நிக்கோலா பஸ்டர், பாலு போஸ்,  அம்பத், குலோத்துங்கன், செந்தில், கயல் விஜயலட்சுமி

தயாரிப்பு: என்.ஏ.ராமு, சரவணன் பொன்ராஜ்

இசை: ராம் சங்கர்

ஒளிப்பதிவு: பிலிப் ஆர்.சுந்தர்,  லோகேஷ் இளங்கோவன்

இயக்கம்: ராம் அருண் காஸ்ட்ரோ

பி ஆர் ஒ: சதீஷ் ( AIM)

தேனி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒரு சிறிய கிராமம் ஈசன் மலை. சொற்ப அளவில் மக்கள் வாழும் அப்பகுதியில் போஸ்ட் மேனாக இருக்கிறார் காளி (காளி வெங்கட்). நேரம் காலமில்லாமல் அவரை எழுப்பி மக்கள் சேமிப்பு பணம் கொடு, கணக்கில் பணம் இல்லாவிட்டால் கையிலிருந்து பணம் கொடு என்று அன்புத் தொல்லை செய்கின்றனர். மலைகிராமத்தில் வேலை செய்வதால் திருமணம் செய்ய அவருக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் இருந்து இடமாற்ற லாகி போக எண்ணுகிறார். ஒரு சமயம் மலை உச்சிப்பகுதியில் வாழும் மூதாட்டி ஒருவருக்கு அரசாங்கத்திலிருந்து வரும் கடிதத்தை கொடுக்க செல்கிறார். அப்போது வழித்துணையாக வரும் பெரியவர் ஒருவர் மலைப்பாதை யில் இருக்கும் பல மைல் நீண்ட ஒற்றையடிப்பாதை மாதேஸ்வரன் (ராம் அருண் காஸ்ட்ரோ) அந்த காலத்தில்  அஞ்சல் கொண்டு செல்லும் போது  உருவானது என்று அந்த கதையை கூறுகிறார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அதிகாரி தரும் கடிதத்தை விசுவாசமாக எடுத்துச் சென்று சேர்கிறான் மாதேஸ்வரன். பிரிட்டிஷார் நாட்டுக்கு நன்மை செய்கிறார்கள் என்று எண்ணு கிறான். ஆனால் அவர்கள் நாட்டில் கனிம வளங்களை கொள்ளை யடிக்கிறார்கள் மக்களை அடிமை யாக நடத்துகிறார்கள் என்ற விவரம் தெரியவர மலையையும் மக்களையும் காக்க ஒரு முக்கிய ஆவணத்தை மறைத்து விடுகி றான். இதனால் மாதேஸ்வரனை வெள்ளைக்கார அதிகாரி சித்ரவதை செய்து   கொல்ல உத்தரவிடுகிறார். அதன் முடிவு என்ன என்பதை திடுக்கிடும் தண்டனை காட்சியுடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.

சில நல்ல படங்கள் ஆரவாரம் இல்லாமல் வெளியாகி மக்கள்.மனதில் இடம் பெற்று விடும். அந்த வரிசையில் ஒரு படம்தான் ஹர்காரா.

ஹர்காரா என்றால் வங்காள மொழியில் அஞ்சல்காரன் என்று அர்த்தம்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் முழு படத்தையும் எடுத்து முடித்திருப்பதும் , மலைப்பகுதி யின் பெரும் பகுதியையும் காளி வெங்கட் மூலம்  கால் நடையாகவே சுற்றிகாட்டியிருப்பதும்  மனதை விட்டு அகலவில்லை.

எதார்த்த நடிகர்களை பட்டியலிட் டால் அதில் காளி வெங்கட்டும் இடம்.பிடிப்பார். மலைக்கிராம போஸ்ட் மேனாக அவர் வேடமேற்றி ருக்கிறார்  என்பதைவிட அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மூதாட்டி ஒருவருக்கு அரசாங்கத். திலிருந்து வந்த கடித்தை கொடுக்க அவரைத் தேடி மலை உச்சிக்கு நடக்க தொடங்கி படும் அவஸ்தை நடிப்புக்காக அவர் வாங்கிய சம்பளத்தை  ஜீரணித்துவிடும்.

மாதேஸ்வரன் பிளாஷ்பேக் தொடங்கியதும் பிரிட்டிஷ் காளத் துக்கே அழைத்து செல்கிறார் இயக்குனர். இதில் இயக்குனரும் , மாதேஸ்வரனுமாக பொறுப்பேற்று இருப்பவர் ராம் அருண் காஸ்ட்ரோ. வேடத்துக்கு அவ்வளவு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

சிலம்பாட்டம் சுற்றப்போடும் சண்டை காட்சிகளில்  பக்காவாக பயிற்சி பெற்றிருப்பதை நிரூபிக்கும் ராம் அருண், மேற்கு தொடர்ச்சி மலை  பகுதி முழுவதும் ஓடி ஓடி அஞ்சல் சென்று சேர்க்கும். போது நம் கால்களே வலித்துவிடு கிறது.

கிளைமாக்சில் கழுமரத்தில் ஏற்றி ராம் அருணை அதிகாரிகள்  கொல்லும் காட்சி மரண வேதனையை உணர வைக்கிறது. கழுமரத்தில் அரைகுறை உயிருடன் இரத்த வெள்ளத்தில் கிடக்கும் அவர் மீது கழுகுகள் சுற்றி வந்து கொத்துவது இன்னமும் வேதனை.

மாதேஸ்வரன் கதையை காளி வெங்கட்டுக்கு சொல்லும் பிச்சைக்காரன் மூர்த்தி ”  மலை உச்சி நடக்கிற தூரம்தான்”  என்று சொல்லி அழைத்துச் செல்வது சுவாரஸ்யம்.

ராம் அருண் காஸ்ட்ரோ, காளி வெங்கட்,  ஆகியோருடன் கவுதமி சவுத்ரி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்,    நிக்கோலா பஸ்டர், பாலு போஸ்,  அம்பத், குலோத்துங்கன், செந்தில், கயல் விஜயலட்சுமி ஆகியோரும் நடித்துள்ளனர்.

என்.ஏ.ராமு, சரவணன் பொன்ராஜ். தயாரித்திருக்கின்றனர்.

ராம் சங்கர் இசை காற்றோடு ஒன்றியிருக்கிறது.

பிலிப் ஆர்.சுந்தர்,  லோகேஷ் இளங்கோவன் கேமிரா மேற்கு தொடர்ச்சி மலைமுழுவதையும் சுருட்டி வந்திருக்கிறது.

நல்ல படங்களை தேர்ந்தெடுத்து வெளியிடும் ட்ரீம் வாரியர்ஸ் தமிழ் நாடு முழுவதும் இப்படத்தை வெளியிட்டுள்ளது.

ஹர்காரா – நடிகர்கள் புதிதென்றாலும் படம் பெரிது.

 

 

 

Related posts

லீடர் : லெஜெண்ட் சரவணனின் டீசருக்கு ஆரவார வரவேற்பு..

Jai Chandran

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் பட ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

அவதார்’: தி வே ஆஃப் வாட்டர் ரூ. 7000 கோடி வசூல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend