Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இறுகப்பற்று’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்

மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் ‘இறுகப்பற்று’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

வெவ்வேறு விதமான கதைக் களங்களைச் சொல்வதிலும், படைப்பாற்றலின் எல்லைகளை விரிவாக்குவதிலும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் பொடன் ஷியல் ஸ்டூடியோஸ். ‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘டாணாக்காரன்’ போன்ற படங்களின் மூலம் இந்திய சினிமாவுக்குத் தரமானத் திரைப்படங்களைத் தருவதில் தொடர்ந்து தங்களின் பங்கைச் சிறப்பாக செய்து வருகிறது.

தற்போது பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் அடுத்தத் தயாரிப்பான ‘இறுகப்பற்று’ வெளியீடுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் பிரதான கதாபாத் திரங்களில் திறம்பட நடித்துள்ளனர்.

மனித உறவுகளின் சிக்கலான தன்மைகளைப் பற்றி பேசும் இந்த படம், ஜஸ்டின் பிரபாகரனின் ஆன்மாவைத் தொடும் இசையை யும், கார்த்திக் நேதாவின் கவிதையான வரிகளையும் கொண் டுள்ளது. கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார், ஜேவி மணிகண்ட பாலாஜி படத்தொகுப் பாளராக பணியாற்றுகிறார். கலை இயக்குநர் சக்தி வெங்கட்ராஜ், ஆடை வடிவமைப்பாளர்கள் பூர்ணிமா ராமசாமி, ஏகன் ஏகாம்பரநாதர் உள்ளிட்டோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

படத்தைப் பற்றி பேசுகையில், “நாங்கள் மீண்டும் ஒரு தனித்துவ மான திரைப்படத்துடன் வருகிறோம், இது உணர்ச்சிகர மான, அழுத்தமான படைப்பாக இருக்கும். இயக்குநர் யுவராஜின் திரைக்கதை நிச்சயமாக பார்வை யாளர்களுக்கு, குறிப்பாக ஜோடி களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” என்று தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.

திருமணமான தம்பதிகளுக் கிடையேயான புரிதலைப் பற்றி தெரிந்து கொள்ள, தயாரிப்பா ளர்கள் சமீபத்தில் ஒரு சுவாரஸ்ய மான நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்வின் மூலம் தம்பதிகளி டையே நேர்மறையான தாக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வைப் பற்றிய சிறப்பு வீடியோ விரைவில் வெளியிடப்படும்.

‘இறுகப்பற்று’ செப்டம்பர் மாதம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

Related posts

22nd death anniversary of Sivaji Ganesan

Jai Chandran

கார்த்தி நடிக்கும் “வா வாத்தியார்” பட முன் வெளியீட்டு விழா..

Jai Chandran

சேரன் – கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend