Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்த நன்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
அண்ணாசாலை
சென்னை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என் ராமசாமி (எ) முரளிராமநாராய ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

திரைப்படம் தயாரிக்கும் பொழுது தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்து இன்றைய முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான  சிவகார்த்திகேயன் ” மாவீரன்” திரைப்பட பத்திரிகையா ளர்கள் சந்திப்பில்” படம் தயாரிக் கையில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் தலையிட்டு தீர்க்க முயற்சிப்பது போன்ற விஷயங்களை தவிர்த்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த லாமே என்று என்னை கேட்கி றார்கள். என்னை பொறுத்தவரை ஒரு நடிகர் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தாவிட்டாலும் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நமக்கு சம்பளம் வந்தால் போதும் தயாரிப்பாள ருக்கு பிரச்சனை வந்தால் நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்க முடியாது. அது நான் நடித்த படம். அதன் லாப நஷ்டங்களில் எனக்கு பங்கு உள்ளது. அந்த படத்திற்கு வரும் பிரச்சனைகளை முடிந்தவரை தீர்த்துவைப்பது எனது கடமை என்று நினைக்கி றேன்” என்று தயாரிப்பாளர்கள் படும் இன்னல்களை மனதில் வைத்து பேசியுள்ளதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நடிகர் ரஹ்மான் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்

Jai Chandran

ரசவாதி (பட விமர்சனம்)

Jai Chandran

RUFUS PARKER’S CITY OF DREAMS

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend