Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

போர்த் தொழில் (பட விமர்சனம்)

படம்: போர்த் தொழில்

நடிப்பு: அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு,  நிழல்கள் ரவி,  நிகிலா விமல், பி.எல். தேனப்பன் ஒ ஏ கே.சுந்தர, சந்தோஷ கீழததூர்,  சுனில் சுகாதா,  ஹரிஸ் குமார்,

தயாரிப்பு: சமீர் நாயர்,. தீபக் சாகெல், முகேஷ், மேத்தா.ஆர்., சி.வி.சாரதி

இசை: ஜேக்ஸ் பிஜாய்

ஒளிப்பதிவு: கலைச்செல்வம் சிவாஜி

இயக்கம்: விக்னேஷ் ராஜா

பி ஆர் ஒ: யுவராஜ்

போலீஸ்.உயர் அதிகாரி பயிற்சி முடித்து வேலையில் இணைய வருகிறார் பிரகாஷ் ( அசோக் செல்வன்). அவரை பணியிலி ருந்து ஓய்வு பெற்ற  கண்டிப்பான அதிகாரி லோகநாதனிடம் (சரத் குமார்) பயிற்சி எடுக்கவும், அவர் கையில் ஒப்படைக்கப்பட்ட மர்ம கொலை சம்பவ விசாரணையில் உதவியாக இருக்கவும் அசோக் செல்வன் அனுப்பப்படுகிறார். தொடக்கத்திலிருந்தே பிரகாஷிடம்  கடுப்படிக்கிறார் லோகநாதன். ஒரு கட்டத்தில் வேலையிலிருந்து ஒட எண்ணுகிறார் பிரகாஷ். அவருக்கு வீனா ( நிகிலா விமல்) தைரியம் சொல்ல பணியை தொடர்கிறார். ஒரு சமயம்  தொடர் கொலை செய்யும் கொலைகாரனை போலீஸ் கண்டுபிடிக்க கொலை காரன் தற்கொலை செய்து கொண்டு சாகிறான். ஆனாலும கொலை சம்பவம் தொடர்கிறது. அதிர்ச்சி அடையும்  அசோக்.சரத் நிஜ கொலையாளியை கண்டு பிடிக்க புதிய முயற்சி எடுக்கின் றனர். அதில் அவர்களால் கொலை காரனை கண்டுபிடிக்க முடிந்ததா என்பதற்கு கிளைமாக்ஸ் படபடப் பான பதில் அளிக்கிறது.

போர்த் தொழில் படக் கதையை சஸ்பென்ஸ த்ரில்லராக உருவாக்க இயக்குனர் விக்னேஷ் ராஜா ஒரு  போரையே  நடத்தியிருக்கிறார்  அதில் வெற்றியும் பெற்றிருக்கி றார். அந்த வெற்றியை பெற்றுத் தரும் தளபதிகளாக சரத்குமார், அசோக் செல்வன் இருவரும் பெரிய யுத்தமே நடத்தியிருக்கின் றனர்.

கண்டிப்பான ஓய்வு பெற்ற  போலீஸ் அதிகாரியாக வித்தியாச மான கதாபாத்திரத்தில் சரத்குமார் வெளுத்துக்கட்ட அவரிடம் இணைந்து துப்பறிய பயந்தும் துணிந்தும் அசோக் செல்வன் செய்யும் வேலை காட்சிகளை கலகலப்பாகவும், விறுவிறுப் பாகவும் நகர்த்துகிறது.

,”பிணவவறைக்கு  நீ வர வேண்டாம்” என்று அசோக் செல்வனை சரத்  வெளியே நிற்கச் சொன்னதும் அசோக். சலிப்புடன்  முணுமுணுப்பதும் பின்னர் உள்ளே அழைத்தவுடன் பிணத்தை பார்த்து குமட்டிக்கொண்டு அசோக் ஓட்டம்.பிடிப்பதும் கலகலப்பு.

கொலைகாரன் எப்படி கொலை செய்கிறான் என்பதை அசோக் செல்வன் கழுத்தில் கம்பியை வைத்து. சரத் நெருக்குவது பரபரப்பு.

சரத்குமாரும் சரி, அசோக் செல் வனும் சரி தங்கள் வேடங்களை நூறு சதவீதம் புரிந்து நடித்திருப் பதில் சரத்தின் அனுபவமும், அசோக்கின் புரிதலும்  செமயாக ஒர்கவுட் ஆகியிருக்கிறது.

சஸ்பென்ஸ் திரில்லாக  காட்சிகள் நகர்ந்துக் கொண்டிருக்க  மறைந்த சரத்பாபு தரும் திடீர் என்ட்ரி இன்ப அதிர்ச்சி. அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதமும் அதற் கேற்ப சரத்பாபு நடித்திருக்கும் நடிப்பும்  அவரை இவ்வளவு சீக்கிரம் திரையுலகம் இழந்து விட்டதே என்று   வருத்தத்தை இரு மடங்காக்குகிறது.

நிலிலா விமல் சும்மா வந்து போய்க்கொண்டிருக்கிறாரே என்று எண்ணும்  நிலையில் கிளை மாக்ஸ் அவர் மீது திரும்புவது எதிர்பாராத டிவிஸ்ட்.

இதற்கு மேல் விமர்சித்தால் கதையை ஓப்பன் செய்ய வேண்டி வரும் அந்த சுவாரஸ்ய அனுபவத் தை ரசிகர்கள் தியேட்டரில் முழுமையாக அனுபவிப்பதுதான் சரியாக இருக்கும்.

சமீர் நாயர்,. தீபக் சாகெல், முகேஷ், மேத்தா.ஆர்., சி.வி.சாரதி தயாரித் திருக்கிறார்கள் .

ஜேக்ஸ் பிஜாய்  இசை படத்தை தூக்கி பிடிக்கிறது.  கலைச்செல்வம் சிவாஜியின்ஒளிப்பதிவு சஸ்பென்ஸ்  திரில்லர் மூடிலேயே  ரசிகர்களை வைத்தி ருக்கிறது.

விக்னேஷ் ராஜா புது இயக்குனர் போல் தெரியாமல் காட்சிகளை கட்டுக்கோப்புடன் இயக்கி அசத்தியிருக்கிறார். அதே சமயம் அடுத்தடுத்து வரும் கொலை சம்பவங்கள் என்னப்பா இதே வேலையா போச்சு என்று அங்களாய்ப்பு வரவழைக்கிறது.

போர்த் தொழில் – நறுக்கான.சஸ்பென்ஸ்  த்ரில்லர்

 

 

 

 

 

 

 

 

Related posts

டிஎஸ்கே சீரியசான நடிகர் ; முனீஸ்காந்த் பாராட்டு

Jai Chandran

மழை பிடிக்காத மனிதன் (பட விமர்சனம்)

Jai Chandran

விமான கட்டணம் குறைக்க கமல் கோரிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend