படம்: பிச்சைக்காரன்2
நடிப்பு: விஜய் ஆண்டனி, காவ்யா தப்பார், ராதாரவி, ஒய்.ஜி.மகேந் திரன், யோகிபாபு, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில்,
தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆண்டனி
இசை: விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு: ஓம்
நாராயண்
இயக்கம்: விஜய் ஆண்டனி
பி ஆர் ஒ; சுரேஷ் சந்திரா, ரேகா (D’ One)
ரூ 1 லட்சம் கோடிக்கு அதிபதியான விஜய் ஆண்டனியின் பி ஏக்கள் இருவரும், டாக்டர் ஒருவரும் சேர்ந்து விஜய் ஆண்டனியின் சொத்தை அபகரிக்க திட்டிடுமின் றனர். அதற்காக விஜய் ஆண்டனி உடம்பில் வேறு ஒருவனின் மூளையை மாற்றி வைத்து அவனை தன் இஷ்டப்படி ஆட்டிப் படைக்க எண்ணுகின்றனர். இதற்காக மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்யும் டாக்டரை ரகசியமாக வரவழைக்கின்றனர். அனாதையாக திரியும் பிச்சைக் காரன் ஒருவனை கடத்தி வந்து கொன்று அவனது மூளையை பணக்கார விஜய் ஆண்டனிக்கு பொருத்துக்கின்றனர். பின்னர் தான் அந்த பிச்சைக்காரனுக்கு ஒரு தங்கை இருந்த விவரம் பிஏக்களுக்கு தெரிய வருகிறது. உடல் மாறினாலும் மூளையின் ஞாபகங்கள் மாறாத விஜய் ஆண்டனி தங்கையை தேட புறப்படுகிறார். அவரை பிஏக்கள் தடுக்கின்றனர். அவர்களின் எண்ணம் நிறைவேறுகிறதா ? விஜய் ஆண்டனி தங்கையை கண்டுபிடித்தாரா ? போன்ற கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
பிச்சைக்காரன் வெற்றி படத்தை யடுத்து பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. முதல் பாகத்தை அம்மா சென்டி மென்ட்டுடன் சசி இயக்கியிருந் தார். இரண்டாம் பாகத்தை தங்கை சென்டிமென்ட்டுடன் விஜய் ஆண்டனி எழுதி இயக்கி ஹீரோ வாக நடித்திருக்கிறார்.
மூளை மாற்று சிகிச்சை செய்து கேமை தொடங்கும் விஜய் ஆண்டனி அதை திருப்பங்களுடன் நகர்த்தியிருப்பது விறுவிறுப்பை சீனுக்கு சீன் அதிகரிக்கிறது.
தங்கள் பேச்சை கேட்கவில்லை என்று தெரிந்ததும் விஜய் ஆண்டனியை கொல்ல ஹரிஷ் பெராடி, ஜான் விஜய் உள்ளிட்ட 3 வில்லன்கள் முடிவு செய்ய அவர்களை விஜய் ஆண்டனி போட்டுத்தள்ளி கடலுக்குள் வீசியதும் இதற்கு பிறகு கதை எப்படி போகப்போகிறது என்பதை யூகிக்க முடியவில்லை. ஆனால் கொஞ்சமும் திணறாமல் “ஆன்ட்டி பிகிலி” என்ற கான்செப்ட்டை கொண்டு வந்து ஏழைகள் சென்ட்டி மெண்ட்டை கவரும் வகையில் மலிவு விலையில் மளிகை பொருள், மலிவுவிலை வீடு என புதிய எபிசோடை புகுத்தி தரமான சம்பவம் செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
இப்படி யொரு சீன் ரஜினி, விஜய் படங்களில் அமையாமல் போனது ஏமாற்றம்தான். இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார்
தொடக்க காட்சிகளில் இருந்த முகம் 2ம் பாதியில் விபத்தில் நடந்த அறுவை சிகிச்சையால் மாறியிருப்பதை உணர முடிகிறது , ஆனாலும் முன்வைத்த காலை பின்வைக்காமல் ஆக்ஷன் காட்சி களில் அதிரடி காட்டிய விஜய் ஆண்டனிக்கு ஒரு கைதட்டல் கொடுக்கலாம்.
கிளைமாக்ஸ் கோர்ட் காட்சிகளில் வாத பிரதிவாதங்ககளில் இன்னும் கூட அழுத்தம் காட்டியிருக்கலாம். அதேசமயம் ஏழைகளுக்காக நீதிபதிகள் முன் கண்ணீர் சிந்தி கொஞ்சும்போது கண் கலங்க.வைக்கிறார் விஜய் ஆண்டனி.
ஹீரோயின் காவ்யா தப்பார் முடிந்தளவு கவர்ச்சி காட்டி ஜில்லிட வைக்கிறார்.
ராதாரவி, ஒய்.ஜி. மகேந்திரன், யோகிபாபு, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில் தங்கள் வேடங்களை சரியாக செய்திருக்கின்றனர்.
பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கிறார்
நடிப்பு, இயக்கம் தவிர கூடுதலாக தனது அதிரடியை இசையிலும் காட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி.
ஓம் நாராயண் கேமிரா பளிச்சென காட்சிகளை பிரமாண்டமாக்கி காட்டு கிறது
விஜய் ஆண்டனி நினைத்தால் தங்கையின் பின்னணி கதையை வைத்து பிச்சைக்காரன் 3ம் பாகம் கூட இயக்கலாம.
பிச்சைக்காரன் 2 – யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ ரசிகர் களுக்கும் தாய்மார் களுக்கும் நிச்சயம் பிடிக்கும் .

