Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ பட வெளியீட்டு தேதி

மாஸ் மகாராஜா’ ரவி தேஜா- இயக்குநர் வம்சி -தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்பட மான ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ எனும் திரைப் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்தத் திரைப்படத்தில் ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா உடன் பாலிவுட் நடிகைகள் நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இணைந்து நடிக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசைமைக்கிறார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ , ‘கார்த்திகேயா 2’ ஆகிய பிரம்மாண்டமான வெற்றி படங்களை வழங்கிய அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனத் தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரித்திருக் கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளரா கவும் பணியாற்றுகின் றனர்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப் படத்திற்காக ஐந்து ஏக்கர் நிலத்தில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமம் பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்ட மான முறையில் உருவாக் கப்பட்டது. 1970களில் ஸ்டூவர்ட்புரம் எனும் கிராமத்தில் வாழ்ந்த டைகர் நாகேஸ்வரராவ் என்னும் திருடனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தில் டைகர் நாகேஸ்வரராவ் எனும் கதாபாத்திரத்தில் ‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா வித்யாசமான கெட்டப்பில் நடிக்கிறார்.

தற்போது இந்த திரைப் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘டைகர் நாகேஸ்வரராவ்’ எனும் திரைப்படம் நவராத்திரி திருவிழா கொண்டாடும் தருணமான அக்டோபர் 20ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியா கிறது. இதற்காக வெளியி டப்பட்டிருக்கும் போஸ்டரில் ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா டைகர் நாகேஸ் வரராவின் கெட்டப்பில் நீராவி ரயில் மீது நின்றி ருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக் கிறது.

தசரா விடுமுறையின் போது ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ திரைப்படம் வெளியாவ தால் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படு கிறது.

Related posts

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’ – சிவகார்த்திகேயன் பேட்டி..

Jai Chandran

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளி வாழ்க்கை படம் 800 உருவான கதை

Jai Chandran

மதுரை ஆதினம் அருணகிரி நாதர் 71 வயதில் காலமானார்: முதல்வர் இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend