Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

65 ஆங்கில பட விமர்சனம்

படம்: 65

நடிப்பு: ஆடம் டிரைவர், அரியனா கிரீன் பிலாட்

தயாரிப்பு: சோனி பிக்சர்ஸ்

ஒளிப்பதிவு: சல்வடோர் டோடினோ

இசை: டான்னி ஹெல்ப்மன்,  கிரிஸ் பேகன்.

இயக்கம்:: ஸ்காட் பெக் மற்றும்  பிரயன் உட்ஸ்

பூமியில் மனிதர்கள் பிறப்பதற்கு  பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையாக உருவாகயிருக் கிறது 65. சோலாரிஸ் என்ற கிரகத்திலிருந்து மகளின் மருத்துவ செலவுக்கு பணம் சேர்க்க ஸ்பேஷ்ஷிப் பயணம் மேற்கொள்கிறார் . நடுவானில் விண்கல். ஸ்பேஷ்ஷிப்  மோத ஷிப்    உடைந்து பூமியில் விழுகிறது இதில் ஆடம் டிரைவர், அரியனா கிரீன்பிலாட்  என்ற சிறுமி மட்டும் உயிர் பிழைக் கின்றனர்.  விழுந்த இடத்தில் டைனசர்கள் வாழ்கின்றன. அவை இவர்கள் இருவரையும் துரத்துகிறது.  அதனிடமிருந்து இருவரும தப்பித்தார்களா, மீண்டும் அங்கிருந்து தங்கள் கிரகத்துக்கு சென்றார்களா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

மனிதர்கள் பிறப்பதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்று சொல்லி சோலாரிஸ் கிரகத்துக்கு அழைத்துச் செல்லும் இயக்குனர் அங்கும் கணவன் மனைவி குழந்தை என்று காட்டி பூமியிலி ருக்கும் உணர்வையே ஏற்படுத்துவதால் வேற்று  கிரகத்தில் இருக்கும் உணர்வு ஏற்படவில்லை.

ஸ்பேஷ்ஷிப் விபத்துக்குளாகி விழும் இடம் பூமியாக இருப்பதும் அங்கு டைனசர்கள் வாழ்கின்றன  என்று காட்டியதும் மீண்டும் ஜுராசிக் பார்க் பயம் தொற்றிக் கொள்கிறது. பயங்கர டயனசர்கள் துரத்துவதும் அதனிடமிருந்து இருவரும் தப்பிக்க குகை களுக்குள் நுழைந்து சிக்கிக் கொள்வதும் பரபரப்பு.

திரைப்படத்தின்  கதையும் திரைக்கதையையும் எழுதி, இதர சிலருடன் சேர்ந்து தயாரித்துள்ள இரட்டை இயக்குனர்கள் ஸ்காட் பெக் மற்றும்  பிரயன் உட்ஸ் 2018 இல் A Quiet Place என்கிற ஒரு திகில் படத்தின் கதாசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது !

ல்வடோர் டோடினோ ஒளிப்பதிவு டான்னி ஹெல்ப்மன்,  கிரிஸ் பேகன் இசை  படத்தோடு ஒன்றிவிடுகிறது.

65  – ஸ்பேஸ்ஷிப் கதையுடன் மீண்டும் ஒரு ஜுராசிக் பார்க்

Related posts

லாரன்சுக்கு ரஜினி அனுப்பிய100மூட்டை அரிசி

Jai Chandran

நாக சைதன்யாவின் “தண்டேல்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

Jai Chandran

உண்மை சம்பவத்தை தழுவி உருவாகும் “கூடு” திரைப்படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend