Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அரியவன் (பட விlமர்சனம்)

படம்: அரியவன்
நடிப்பு: ஈஷான், டேனியல் பாலாஜி, பிராணாலி, சத்யன், சூப்பர் குட் சுப்ரமணியன்

தயாரிப்பு: எம் ஜி பி மாஸ் மீடியா

இசை: ஜேம்ஸ் வசந்தன்

ஒளிப்பதிவு: கே. எஸ். விஷ்ணு ஶ்ரீ

இயக்கம்: மித்ரன் ஆர் ஜவஹர்

பி ஆர் ஒ: சதீஷ், சிவா ( AIM)

நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஈஷான். கல்லூரி மாணவி பிரனாலி யுடன் காதல் மலர்கிறது. பிரனாலியின் சக தோழியை ஒரு கூட்டம் ஆபாச படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுகிறது.  இதற்கு பயந்து தற்கொலை செய்ய முயல்கிறார். அவரை மிரானலி காப்பாற்றுவதுடன் இதுகுறித்து ஈஷானிடம் சொல்கி ஒப்றார். மிரட்டும் கூட்டத்தை சந்திக்கும் மிரனாலியும் அவரது தோழியும் வசமாக அவர்களிடம் சிக்கிக்கொல்கின்றனர். அந்த சமயத்தில் அங்கு வரும் ஈஷான் மிரட்டும் ரவுடி கூட்டத்தை அடித்து துவம்சம் செய்து ஒருவரின் கையை வெட்டுகிறார். மிரானாலி யையும் தோழியையும் காப்பாற் றுகிறார். அதற்கு பிறகுதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. கைவெட்டுபட்டவன் டேனியலின்y தம்பி என்பதால் ஈஷானை  கொல்ல அடியாட்களை அனுப்பு கிறார் டேனியல் . அவர்களிட மிருந்து குடும்பத்தின் ஈஷான் தப்பினாலும் பெண்களை கடத்தும் கூட்டத்தின் அடாவடி அதிகரிப்ப தைக் கண்டு அவர்களையும் விடுவிக்க ஈஷான் எண்ணுகிறார். இதன் முடிவு என்ன என்பதை கிளைமாக்ஸ் விளக்குகிறது.

பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டும் கும்பலின் கதை அடிக்கடி வருகிறது ஆனால் இக்கதை சொல்லப்பட்டிருக்கும் விதம் மாறுபட்ட திரைக்கதையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சன்போல் ஆறடி உசர  ஈஷான் அசர வைக்கிறார். கராத்தே சண்டை கற்றவர் என்பதால் ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்புகிறார். தன்னை தாக்க வருபவர்களை தடுத்து திருப்பி தாக்கும்போது செம் பஞ்ச் வைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் கவர்ந்தாலும் நடிப்பில் இன்னும் நிறைய கற்க வேண்டும். கிட்டத் தட்ட எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரியாக முகபாவம் காட்டியி ருக்கிறார் ஈஷான்.

மிரனாலி ஈஷானின் காதலியாக வந்து மரத்தை சுற்றி காதல் டூயட் பாடிச்  செல்லாமல் கொஞ்சம் நடிப்பையும் வெளிப்படுத்தியி ருக்கிறார். தோழியை மிரட்டும் ரவுடிகளின் தைரியமாக நியாயம் கேட்பது துணிச்சல். பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றும் வாலிபர்களுக்கு ஹெட்டாக வரும் டேனியல் வில்லன் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

படத்தின் கிளைமாக்ஸ் பாலியல் கொடுமையால் பாதிகப்பட்ட பெண்களுக்கு தைரியமூட்டும் வகையில் அமைத்ததிருப்பதுடன் ஈஷான் புதுமுகம் என்பதால் அவருக்கான அளவுகோல் மீறாமல் காட்சிகளை இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் அமைத்திருப்பது ஓகே.

பாலியல் கொடுமைக்குள்ளாகும் பெண் களுக்கு அவர்களின் அச்ச உணர்விலிருந்து இப்படம் விடுவித்து புது துணிச்சல் தரும்.

இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர்.
சூப்பர் குட் சுப்ரமணி, சத்யன் இருவரும் கொடுத்த வேலையை செய்திருக்கின்றனர்

ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளார்.

அரியவன் – ஆதரவானவன்

 

Related posts

ஐஸ்வர்யாராயுடன் நெருக்கமாக இருக்க த்ரிஷாவுக்கு மணிரத்னம் எதிர்ப்பு

Jai Chandran

ஒரே பாலின பட பர்ஸ்ட் லுக் வெளியீடு

Jai Chandran

முதல்வர் கொரோனா தடுப்பு நிதிக்கு வடிவேலு ரூ. 5 லட்சம் தந்தார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend