Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

துணிவு பட விமர்சனம்

படம்: துணிவு

நடிப்பு: அஜீத்குமார் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, அஜெய் ஜான் கொக்கேயின், ஏ.எல். அழகப்பன், ஜி.எம்.சுந்தர் பக்ஸ், பிரேம், மோகனசுந்தரம், வீரா, தர்ஷன், மகாநதி சங்கர், சிபி, பவானி, அமீர், சிராங் ஜானி ரித்துராஜ் சிங், சிஜாய் வர்கீஸ் பிர்லா போஸ்

தயாரிப்பு: போனி கபூர்

இசை: ஜிபரான்

ஒளிப்பதிவு: நீரவ்ஷா

இயக்கம்: எச்.வினோத்

பி. ஆர். ஓ: சுரேஷ் சந்திரா, ரேகா (D’ one) நாசர்

வங்கி ஒன்றில் அதிகப்படியாக இருக்கும் 500 கோடியை கொள்ளையடிக்க போலீஸ் அதிகாரி உதவியுடன் ஒரு கூட்டம் திட்டமிட்டு வங்கிக்குள் நுழை கிறது. அங்குள்ள வர்களை மிரட்டி அறையில் அடைக்க முற்படும் போது என்ட்ரி தரும் அஜீத்குமார் கொள்ளையர்களை அடித்து துவம்சம் செய்து தான் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருகிறார். தான் 5 ஆயிரம் கோடியை கொள்ளையடிக்க வந்துள்ளதாக கூறுவதுடன் கொள்ளையர்களை தன்னுடன் கூட்டு சேர்க்கிறார். போலீஸ், கமாண்டோ படை வங்கியை சுற்றி வளைக்கிறது. வங்கிக்குள் பணத்தை கொள்ளை யடிப்பதை விட்டுவிட்டு வேறு ஒரு பொருளை அஜீத் தேடுகிறார். தீவிர தேடுதலுக்கு பிறகு ஒரு சிலிண்டரை எடுக்கிறார். அதில் பெரிய வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை மறைத்து வைத்தவர் வங்கியின் தலைவர். மக்களிடம் இன்சூரன்ஸ், கிரிடிட் கார்ட், ஷேர் மார்க்கெட் என பல வற்றில் மோசடி செய்து 25 ஆயிரம் கோடி பதுக்கி வைத்திருக் கிறார் . அதை அப்படியே அபேஷ் செய்ய திட்டமிடும் வங்கி தலைவரை வரவழைத்து மோசடி செய்த பணத்தை மீட்டு அஜீத் எப்படி மக்களிடம் ஒப்படைக்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.

அஜீத் செம்ம மாஸ் என்று சொல்லும் அளவுக்கு கலக்குகலக் குன்னு கலக்கியிருக்கிறார். என்ட்ரியே ஆக்ஷன் சீனோடு ஓப்பன் ஆகறதாலே ரசிகர்களின் ஆரவாரம் காதை துளைக்கிறது.

அஜீத் கொஞ்சம் வெயிட் போட்டி ருந்தாலும் அதற்காக பர்பாமன்சில் குறை வைக்கவில்லை.
ஆக்ஷன் காட்சிகளில் அடி தூள் கிளப்பியிருக்கிறார்.

மிஷன் கன்னில் ஸ்டைலாக சுட்டுத்தள்ளுவதாகட்டும், கைச் சண்டையில் சுறுசுறுப்பாக மோது வதாகட்டும் அஜீத் அல்ட்டிமேட்தான்.

‘ஒரு நல்லவன் மேல கைய வச்சிட்டியே ‘ என்றபடி வில்லன் மொகரைய  அஜீத் பெயர்க்கும் போது ரசிகர்கள் அமர்க்களப்ப டுத்துகின்றனர்.

மிஷன் கன்னில் அஜீத் சுட்டுத் தள்ளும்போது கொள்ளையர்கள் செத்து விழுகின்றனர் ஆனால் நெஞ்சில் குண்டடிப்பட்டும் அஜீத்துக்கு இரத்தம் வருவதோடுசரி வேறு ஒன்றும் ஆவதில்லை. இந்த லாஜிக்தான் புரியவில்லை.

அஜீத்துக்கு துணை நிற்பவராக வருகிறார் மஞ்சு வாரியர். ஆக்ஷன் காட்சிகளில் சிரம்ப்பட்டு நடித்திருக் கிறார்.

படத்தில் காமெடிக்கு புதுசா என்ட்ரி கொடுத்திருக்கிறார் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் தன் பாணியில் கமெண்ட் அடித்து கலகலக்க வைக்கிறார். ஏற்கனவே சாலமன் பாப்பையா, ராஜா, ஞானசம்பந்தம் போன்றவர்கள் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள் தற்போது மோகன சுந்தரம் வேறுவந்து விட்டதால் பட்டிமன் றத்தில் யார் பேசுவது என்றுதான் தெரிவில்லை.

போலீஸ் கமிஷனராக சமுத்திரக் கனி வந்தாலும் அவரது கையை கட்டிப்போட்டிருக்கிறார் இயக் குனர்.

மகாநதி சங்கர் கான்ஸ்டபிளாக இருந்தாலும் அஜீத்தின் கைப்பாவையாகி கலகலக்க வைக்கிறார். பக்ஸ் காமெடியும் ஓ கே.

போனிகபூர் படத்தை தயாரித்திருக் கிறார்.

நிரவ்ஷா ஒளிப்பதிவு கைகொடுத் திருக்கிறது.

ஜிப்ரான் இசையில் ஜில்லா ஜில்லா, காசேதான் கடவுளடா பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது.

இயக்குனர் எச் வினோத் கிரிடிட் கார்டு பங்குசந்தை முதலீடு  போன்ற  மோசடிகளை அஜீத் மூலம் சொல்லி மக்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக் கிறார்.

துணிவு – ஆக்ஷன் எக்ஸ்பிரஸ்.

 

Related posts

SonyLIV’s next Thittam Irandu On July 30th

Jai Chandran

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2விலிருந்து “தெய்வா” பாடல் வெளியீடு..

Jai Chandran

Vettri starrer “BUMPER” Trailer and Audio Launch Event !!!*

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend