Trending Cinemas Now
சினிமா செய்திகள் செய்திகள் விமர்சனம்

கனெக்ட் (பட விமர்சனம்)

படம்:கனெக்ட்

நடிப்பு: சத்யராஜ், நயன்தாரா, அனுபம்கெர், வினய், ஹைனா நஃபிஸா

தயாரிப்பு: ரவுடி பிக்சர்ஸ் விக்னேஷ்சிவன்

இசை:பிரித்வி சந்திரசேகர்

ஒளிப்பதிவு : மணிகண்டன்

இயக்கம்:அஸ்வின் சரவணன்
பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா, நாசர் ( D’One)

சுசன்( நயன்தாரா) கணவர் ஜோசப் (வினய்). இவர்களது மகள் அம்மு (ஹைனா நபிஸா). சுசன் தந்தை ஆர்தர் சாமுவேல் (சத்யராஜ்). கிதார் வாசிக்கும் ஆர்வம் கொண்ட அம்முவுக்கு வெளிநாடு சென்று இசை கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசை. அதற்கேற்ப அவருக்கு அட்மிஷனும் கிடைக்கிறது. தந்தை  சம்மதம் தெரிவித்தாலும் தாயார் சுசன் எதிர்ப்பு தெரிவிக் கிறார். பள்ளிபடிப்பு கூட முடிக்காத நிலையில் மகள் வெளிநாடு சென்று படித்தால் அவளால் சமாளிக்க முடியாது பள்ளி படிப்பை முடித்துவிட்டு பிறகு வெளிநாடு போய் படிக்கலாம் என்கிறார். இந்தநிலையில் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப் படுகிறது. டாக்டரான ஜோசப் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை அளிக்கிறார். இதில் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறக்கிறார். ஜோசப் இறந்ததால் சுசன், அம்மு சோகமா கின்றனர். இவர்களும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் தனிமை படுத்திக்கொள்கின்றனர். தந்தையின் நினைவாக இருக்கும் அம்மு அவரது ஆவியுடன் பேச ஓஜா போர்டு மூலம் முயல்கிறார். ஆனால் கெட்ட ஆவி அம்முவை பிடித்துக் கொள்கிறது அம்முவுக்கு பேய் பிடித்திருப்பதை அறிந்து அதிர்ச்சி அடையும் சுசன் பாதிரி யார் ஒருவரின் துணையுடன் அதை ஆன்லை மூலமாக விரட்ட முடிவு செய்கிறார். ஆன்லைன் மூலம் மந்திரங்கள் ஜெபிக்கும் பாதிரியார் பேயை விரட்டினாரா அல்லது பேய் இவரை விரட்டியதா என்பதற்கு படம் திகுல்டன்  பதில் சொல்கிறது.

நயன்தாரா, மகள் ஹைனா நபிஸா, சத்யராஜ் இவர்கள் மூன்றுபேரும்தான் படத்தில் பிரதானம்.
ஹைனாவின் செயலில் மாற்றத்தை கண்டறியும் சத்யராஜ் அவருக்கு பேய் பிடித்திருக்கும் விஷயத்தை நயன்தாராவிடம் சொல்ல அவரோ அதை நம்பாமல் மகள் தனிமையில் இருப்பதால் மனபாதிப்பில் இப்படி நடந்து கொள்வதாக கூறும்போது பொறுமையான நடிப்பை வெளிப்  படுத்தியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் மகளுக்கு பேய் பிடித்திருப்பதை உணர்ந்து பதற்றம் அடையும் நயன்தாரா மகளை மீட்க போராடுவதும் மகள் பேயிடம் சிக்கிபடும் அவஸ்த்தை யை கண்டு பதறுவதும் படபடப்பை அதிகரிக்கிறது.

வீட்டுக்கு வந்து பாதிரியார் ஜெபம் செய்வதை ஏற்காமல் முரண்டு பிடிக்கும் நயன் மகள் அவர் தரும் பிரசாதத்தை துப்புவதும், ஒரு கட்டத்தில் நயன்தாராவையே தூக்கி வீசி அலறவிடுவதும் ஷாக்.

பேயை விரட்டும் பாதிரியாராக இந்தி நடிகர் அனுபம்கெர் வருகிறார். ஆன்லைன் மூலம் பேயை விரட்ட எடுக்கும் முயற்சி புதுசு. ஒரே நேரத்தில் அனுபம் கெர், நயன்தாரா, சத்யராஜ் ஆகியோருக்கு பேய் ஆட்டம் காட்டுவது திகிலுடன் ஒரு சிரிப்பு சிதறலையும் அரங்கில் படர விடுகிறது.

பேய் பிடித்த மகள் தலையில் சிலுவையை வைக்க நயன்தாரா பயத்துடன் நெருங்கும்போது அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் பரவுகிறது.

நயன்தாராவின் தந்தையாக வரும் சத்டராஜ் வழக்கமான தனது நக்கல் நய்யாண்டிகளை காட்டாமால் பேய் பிடித்திருக்கும் தனது பேத்தியின் உயிரை மீட்க பதறும்போது நெகிழ வைக்கிறார்.

கொரோனா ஊரடங்கு கதை என்பதால் படத்தில் பெரும்பாலும் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக் கொள்ளாமல் லேப்டாபில் ஆன்லைன் மூலமே தொடர்பு கொண்டு பேசி நடிப்பது புது அனுபவம்.
காட்சிகளை புரிந்து கொள்ள சில மணித் துளிகள் எடுத்துக்கொள் கின்றன.

பேய் படங்களில் வழக்கமாக வரும் கதவு மெதுவாக திறப்பது, கதவை சத்தமாக தட்டுவது போன்ற காட்சிகள் சலிப்பு தட்டினாலும் திக் திக் நிமிடங்களை உருவாக்க தவற வில்லை.

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கிறார்.

அஸ்வின் சரவணன் ஹாலிவுட் பாணியில் காட்சிகளை தர முயன்றிருக்கிறார்.

மணிகண்டன் ஒளிப் பதிவு இருள் சூழ்ந்த சூழலை ஏற்படுத்தி பயத்தை தக்க வைக் கிறது.

காட்சிகளுக்கு பிரதானமாக கைகொடுக்கிறது பிரவின் சந்திர சேகர் இசை .

கனெக்ட் – ஆன்லைன் பேயாட்டம்.

 

 

Related posts

எம் ஜி ஆர் பட டைட்டில் படத்தில் சென்சார் போட்ட கத்திரி: இயக்குனர் பரபரப்பு

Jai Chandran

10000 sq feet poster by Zee5 for Ajith Kumar’s latest Valimai

Jai Chandran

Actress Seetha Turned Utubet

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend