Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பதக்கம் வென்றவர்களுக்கு மநீம பாராட்டு.

பார்வையற்றோருக்கான தேசிய தடகளம்.. பதக்கம் வென்று சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு மநீம பாராட்டு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற 22-வது தேசிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நந்தினி நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம், பிரவீன்குமார் ஈட்டி எறிதல், பார்த்திபன் 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

தேசியப் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கும், அவர்களை ஊக்குவித்த தமிழ்நாடு அமெச்சூர் பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கத்துக்கும் மக்கள் நீதி மய்யம் மனமார்ந்தப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இன்னும் பல வெற்றிச் சிகரங்களை அடைய வாழ்த்துகிறது.

Related posts

An Announcement on No6VaathiyarKaalpandhaattaKuzhu on 7th July

Jai Chandran

ராஜா இசையில் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் முதல் பாடல்!

Jai Chandran

Actor association distributed diwali gift to members

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend