Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அறவழி உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு: சரத்குமார்

மது மற்றும் போதை ஒழிப்பிற் கான. அறவழி உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவ தாக சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ரா.சரத்குமார் அறிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் இன்று (03.12.2022) நடைபெறவிருந்த உண்ணாவிரத அறவழிப் போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி தர காலதாமதம் ஆனதால், சென்னை, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுவழங்கப்பட்டு, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மீண்டும் காவல்துறையிடம் அனுமதி கோரி இருந்தோம்.

மது மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் முக்கிய சமூக பிரச்சனை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருங்கால தலைமுறை யினரை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உண்ணாவிரத ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள் ளப்பட்டன.

ஆனால், காவல்துறை சென்னை யில் அனுமதி வழங்கி, பிற இடங்களில் அனுமதி மறுத்துள்ள காரணத்தினால், தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த இயலாத சூழலால், இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நடை பெறவிருந்த, மது மற்றும் போதை ஒழிப்பிற்கான அறவழி உண்ணா விரதப் போராட்டம் ஒத்தி வைக்கப் படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், ஏற்கெனவே திட்டமிட்டபடி அனைத்து இடங்களுக்கும் நீதிமன்றத்தை நாடி முறையான அனுமதி பெற்று விரைவில் உண்ணாவிரதம் நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சி நிறுவன  தலைவர்  ரா.சரத்குமார் கூறியுள்ளார்.

Related posts

ஹரா: ஆக்ஷனில் அதிரடி காட்டும் மோகன்

Jai Chandran

டியர் ரதி (பட விமர்சனம்)

Jai Chandran

Pa.Ranjith releasing the trailer of writer today

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend