Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அருண் விஜய்யின் “அச்சம் என்பது இல்லயே” படத்திற்கு ரூ 3.5 கோடியில் லண்டன் சிறை

ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண் விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லயே’ படத்திற்காக 3.5 கோடி மதிப்பிலான லண்டன் சிறையை 2.5 ஏக்கரில் செட் அமைத்திருக்கி றார்கள்*

இயக்குநர் விஜய் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்து வரக்கூடிய ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், லண்டனில் முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கி இருக்கிறது. சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் 3.5 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக லண்டன் சிறையின் பிரதியை செட் அமைத்துள்ளனர். ராமலிங்க மேஸ்திரி உதவியுடன் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக் கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார். இந்த ஷெட்யூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இதில் பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுடன் அருண் விஜய் பங்கேற்கக் கூடிய தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.

முன்பே திட்டமிட்டபடி படத்தின் ஷெட்யூல் மிகச் சரியாக போய் கொண்டிருப்பது குறித்து தயாரிப் பாளர் தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தியுள்ளார். இயக்குநர் விஜய்யும் திட்டமிட்டபடி அந்த நேரத்திற்குள்ளோ அல்லது அதற்கு முன்போ மிகச்சரியாக படப்பிடிப்பை முடித்து விடக் கூடியவர். அதைப் போலவே ‘அச்சம் என்பது இல்லயே’ படப்பிடிப்பும் திட்டமிட்ட காலத் திற்கு முன்பாகவே முடிந்து விடும்.

லண்டனில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப் பட்டபோது, நடிகர் அருண் விஜய்க்கு தீவிரமான காயம் ஏற்பட்டு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியும் இந்த இடை வேளையால் படப்பிடிப்பு பாதிக் கப்படக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு முடித்ததும் சிகிச்சை என்பதில் அருண் விஜய் உறுதியாக இருந்தார். பிஸியோ தெரபிஸ்ட் உதவியுடன் துன்புறுத் துகிற இந்த வலியைப் பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பில் பங்கேற்றார்.

ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார். நிமிஷா விஜயனுடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஏமி.

தொழில்நுட்பக் குழு விவரம்:

தயாரிப்பு எம் ராஜசேகர் & எஸ். ஸ்வாதி.  இணைத்தயாரிப்பு சூர்ய வம்சி, ப்ரசாத் கோதா மற்றும் ஜீவன் கோதா. இசை ஜிவி பிரகாஷ்குமார். திரைக்கதை: ஏ மஹாதேவ்.  ஒளிப்பதிவு சந்தீப் கே விஜய். எடிட்டிங் அந்தோணி.
சண்டைப்பயிற்சி ஸ்டண்ட்’ சில்வா.
மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா- ரேகா (D’One).

Related posts

அஜீத் ரசிகர்களை சந்திக்க வேண்டும்: ஜெய் விஜயம் விழாவில் கே.ராஜன் பேச்சு

Jai Chandran

An honor that crossed the seas for Sanitation Worker..

Jai Chandran

Karnan Reservations starts Tomorrow: April 9th Release

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend