Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சீனு ராமசாமி இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ்

தென்மேற்கு பருவக்காற்று நீர்ப்பறவை தர்மதுரை மாமனிதன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி  இயக்கத்தில் மாதம்பட்டி சினிமாஸ் தயாரிப்பில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படம்..

மெஹந்தி சர்க்கஸ் திரைப் படத்தில் நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் திகழும் இவர், தற்போது பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் தமது அடுத்த திரைப்படத்தில் நடிக்க இருக்கி றார்.

முன்னதாக கேசினோ எனும் திரைப்படத்தில் நடித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத மற்றுமொரு திரைப் படத்திலும் நடித்திருக் கிறார். இந்நிலையில்தான் இயக் குனர் சீனு ராமசாமி இயக்கத்தி லான தம்முடைய அடுத்த திரைப் படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பையும், விமர்சகர்களின் நல்ல மதிப்பீடுகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது திரு.சீனு ராமசாமி இயக்கத்தி லான நல்ல ஒரு காதல் கதையில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கவிருக் கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது. வரும் டிசம்பரில் தொடங்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட இதர விபரங்கள் விரைவில் வெளியாகவிருக் கின்றன. இப்படத்தின் இதர தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகையர் தொடர்பான தேர்வுகள் நடைபெற்று வரும்நிலையில், அவை குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

Related posts

MindVoiceTeaser Release Tomorrow at 4PM.

Jai Chandran

ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் (பட விமர்சனம்)

Jai Chandran

ZEE5 ஒரிஜினல் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend