Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வரலாறு மாறாமல் உருவாகும் “தேசிய தலைவர்” பட டீஸர் ரிலீஸ்

ஜல்லிக்கட்டு பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் எம்.எம்.பாபு , எஸ் எஸ் ஆர் .சத்யா , ஜி.ஜெயந்தினி இணைந்து தயாரிக்கும் படம் தேசிய தலைவர். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். இசைஞானி இளைய ராஜா இசை அமைக்கிறார்.

இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் ஏவி எம் ஸ்டுடியோவில் நடந்தது.
தொடக்க நிகழ்ச்சியாக முத்து ராமலிங்க தேவர் உருவ படத்துக்கு மலர் தூவி வணங்கினர்.
விழாவுக்கு வந்தவர் களை சவுத்ரி வரவேற்றார்.

பின்னர் நவமணி பேசியது: முத்துராமலிங்க தேவர் வரலாற்றை சரியாக சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் அரவிந்தராஜ் இப்படத் தின் ஸ்கிரிப்ட்டை ஒரு அர்ப்பணிப் புடன் என்னிடம் கூறினார். படப்பிடிப்பின்போது சிறு சம்பவம் மாறினாலும் அதை சரியாக எடுக்க சொல்லி படமாக்கப் பட்டது. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது சித்த வைத்தியம்தான் எடுத்தார். அலோபதி மருத்துவம் எடுக்க அவர் சம்மதிக்கவில்லை. பின்னர் பாராளுமன்ற குழு அவர் உடல்நலன் பற்றி பார்க்க வந்தபோது மட்டும் மருத்துவமனை யில் சேர சம்மதித்தார். ஆனால் தனக்கு பெண் டாக்டர், நர்ஸ் சிகிச்சை அளிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். அவர் இறந்த போது எனக்கு சிறுவயது. அவர் வாழ்ந்த வீட்டின் எதிரிலேயே உட்கார்ந்த நிலையில் உப்பு , உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அவர் மீது போடப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார். அந்த இடத்தில் தான் வருடா வருடம் குருபூஜை நடக்கிறது. அவர் ஒரு சித்தர்.

எஸ்.எம்.பஷீர் பேசியதாவது:
பசும்பொன் முத்துராமலிங்க தேவரய்யாவாக நடிக்க கிடைத்த வாய்ப்பு அவரது ஆசியால்தான் கிடைத்திருக்கிறது. இப்படத்தை எடுப்பது எளிதான விஷயமல்ல. படப்பிடிப்பின்போதுகூட பல்வேறு சம்பவங்கள் நடந்தது எல்லாவற் றையும் கடந்து இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தில் இசைஞானி இளையராஜா இசை அமைக்க ஒப்புக் கொண்டபோது அவருக்கு பெரிய பதவி கிடைக்கும் என்று கூறினேன். தற்போது அவர் எம் பி ஆகியிருக் கிறார். அதை எனக்கு தொலை பேசியில் தெரி வித்து மகிழ்ந்தார்.

மேலும் தயாரிப்பாளர்கள் எம் எம் பாபு , எஸ் எஸ் ஆர் .சத்யா மற்றும் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் வாழ்த்தி பேசினார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை டைமண்ட் பாபு செய்திருந்தார்.

Related posts

ரஜினி தொடங்கி வைத்த ஓய் ஜி மகேந்திராவின் சாருகேசி திரைப்படம்

Jai Chandran

சிரஞ்சீவி- மோகன் ராஜா கூட்டணியின் புதிய அறிவிப்பு.

Jai Chandran

Maasive Banner of Maayon

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend