Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆசியா விருது பெற்ற நடிகர் குரு சோமசுந்தரம்

ஆசிய கண்டத்தின் ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்’ சிறந்த முன்னணி நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் குருசோமசுந்தரம்.

ஆசிய திரைப்படங்களுக்கான ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட் 2022 விருதுகள் அறிவிப்பில் நடிகர் குருசோம சுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப் பட்டது.

ஆசிய நாடுகளின் திரைப்படங் களுக்கான விருதுகள்
‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்’ இந்தவருடம் வழங்கப் பட்டது. இதில் பதினாறு நாடுகளைச்சேர்ந்த பல்வேறு மொழிப்படங்கள் கலந்து கொண்டன.

சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலி ருந்து சிறந்த நடிகருக்கான விருது நடிகர் குருசோமசுந்தரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த விருது ‘மின்னல்முரளி’ படத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டது.

டிசம்பர் மாதம் விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெற விருக்கிறது. ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகளை சார்ந்த பல்வேறு மொழி திரைத்துரையை சார்ந்தவர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

Related posts

இரவின் நிழல் ஆடியோ வெளியீடு: பாரதிராஜா அழைப்பு

Jai Chandran

ச ம க மாவட்ட துணை பொதுச் செயலாளரை நியமித்த சரத்குமார்

Jai Chandran

ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள ” பொல்லாப்பு ” 

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend