Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

காட்டேரி (பட விமர்சனம்)

படம்: காட்டேரி

நடிப்பு: வைபவ், கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபி, சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார்,ஜான் விஜய், பொன்னம்பலம்

தயாரிப்பு: கே. ஈ.ஞானவேல்ராஜா, அபினேஷ் இளங்கோவன்

இசை: பிரசாத் எஸ்.என்.

ஒளிப்பதிவு : விக்னேஷ் வாசு

இயக்கம்: டி.கே

பி ஆர் ஒ: யுவராஜ்

வைபவ், கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபி, சோனம் பஜ்வா, ஆத்மிகா ஆறு பேரும் தங்க புதையல் தேடி கிராமம் ஒன்றிற்கு வருகின்றனர். அந்த கிராமத்தில் இருந்தவர்கள் கோவில் திருவிழா நடக்கும்போது மின்சாரம் தாக்கி ஒட்டுமொத்தமாக பல வருடங்களுக்கு முன்பே இறந்ததால் எல்லோரும் பேயாக அலைகின்றனர். புதையல் தேடி வந்தவர்களை பேய் கூட்டம் பயமுறுத்துகிறது. ஒரு கட்டத்தில் வைபவ் கோஷ்டி  மனிதர்களை விழுங்கும் காட்டேரி கூட்டத்திடம் சிக்கிக்கொள்கின்றனர். காட்டேரி கூட்டத்திடமிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கிளைமாக்ஸ்.

யாமிருக்க பயமே என்ற காமெடி பேய் படத்தை இயக்கிய டி.கே தற்போது பேய் கதையில் காட்டேரியையும் கூட்டு சேர்த்து காமெடி திகில் கதையாக காட்டேரியை இயக்கி அளித்திருக் கிறார். அத்துடன் சில இடங்களில் டபுள் மீனிங் வசனங்களையும் சேர்த்து சிலரை முகம் சுழிக்கவும், பலரை  கைகொட்டி சிரிக்கவும்  வைத்திருக்கி றார்.

பேய் கிராமத்துக்குள் வைபவ், கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபி, சோனம் பஜ்வா, ஆத்மிகா நுழைந்த வுடனே காமெடியும் தொடங்கி விடுகிறது. அங்கிருக்கும் வீடொன்றில் நுழைந்து காபி சாப்பிட தயாரானதும் வீட்டில் உள்ள கணவன் , மனைவி, குழந்தை மூவரும் பேயாக மாறி வைபவ் கோஷ்டியை பின்னிபெட லெடுக்கிறது.

அதேபோல் காராசேவுக்கு ஆசைப் பட்டு பேயிடம் சண்டைபோடும் ரவிமரியா தலையில் அரிவாள் வெட்டு வாங்கி அலறும் நபரை கண்டு பீதியில் உறைவதும், பெண்ணின் அழகில் மயங்கி அதன் பின்னால் ஜொல்லுவிட்டு அலையும் கருணா கரன் அதுபேயாக மாறியதும் அலறியடித்து ஓடுவதுமாக தொடர் காமெடிகள் அரங்கை அலறவிடு கிறது.

ஆத்மிகா, பூனம் பஜ்வாவிடம் கருணாகரன், ரவிமரியா செய்யும் சேட்டைகள் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.

மாத்தம்மாவாக வரும் வரலட்சுமி, “நான் அழகா இருக்கேனா” என்று கேட்டு திடும் என பேயாக மாறி ஆளை தூக்குவதும் அவரிடம் சிக்கிக் கொண்டு வைபவ் கோஷ்டி பாடாய்படுவதும் கலகல.

கிணறிலிருந்து கட்டி கட்டியாக காடேரி அனுப்பும் தங்கத்துக்கு ஆசைப்பட்டு அதற்கு வருவும் அவர் தங்கையும் பலியாவது பேராசைக்கான பரிசு.

காட்டேரியாக நீண்ட மூக்குடன் வரும் பச்சை உருவங்கள் பயத்துக்கு பதில் சிரிப்பை வரவழைக் கின்றன.

கே.ஈ.ஞானவேல்ராஜா, அபினேஷ் இளங்கோவன் தயாரித்திருக் கின்றனர்.

இயக்குனர் டி கே, பேயை காமெடியாக்கி வேடிக்கை காட்டியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு, டார்க் ஒளிப்பதிவில் பயமுறுத்த பார்த்தாலும் எல்லா காட்சிகளையும் காமமெடியாக்கி திகிலையே மறக்கடிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர்.

காட்டேரி- லாஜிக் மாஜிக் இல்லாதா காமெடி விருந்து.

Related posts

விஜய் ஆண்டனி நடிக்க பாலாஜி கே குமார் இயக்கும் ‘கொலை’.*

Jai Chandran

கொரோனா ஊரடங்கில் கட்டுப்பாடு மற்றும் தளர்வுகள்

Jai Chandran

வைபவ் நடிக்கும் “சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” டீஸர் விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend