Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா!

மசாலா பிக்ஸ் (Masala Pix)  நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் ஆர்.கண்ணண் ஃபோக்கஸ் (Focus Films) நிறுவனத்துடன் இணைந்து “புரடக்‌ஷன்  7” படத்தை டைரக்ட் செய்து தயாரிக்கிறார்.

#ஜெயம்கொண்டான், #கண்டேன்காதலை, #சேட்டை, #இவன்தந்திரன், போன்று எல்லா வகை கதைகளையும் டைரக்ட் செய்து அனைவருக்கும் பிடிக்கும் தரமான வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து வருபவர் இயக்குநர் ஆர். கண்ணன்.

தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான #கிரேட்இந்தியன்கிச்சன் படத்தை தமிழில் டைரக்ட் செய்து ரிலீஸ் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளார். மும்பை தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதை தயாரித்துள்ளார்கள். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார்.
இதை அடுத்து, மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் நடிக்கும் #காசேதான்கடவுளடா படத்தை டைரக்ட் செய்துள்ளார்.

அடுத்ததாக, இன்று குடும்பங்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் சயின்பிக்சன், ஃபேண்டஸி வகையில் காமெடி ஹாரர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர்  ஆர்.கண்ணன் ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து இப்படத்தை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவுக்கு புதியதாகவும், ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாகவும் இப்படம் இருக்கும்.

ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் நேத்ரா எனும் இளம் அறிவியல் விஞ்ஞானி பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக சென்னை ECR-ல் ஒரு பிரமாண்டமான சயின்ஸ் லேப் ஒன்றை பெரும் பொருட்செலவில் அமைக்கி றார்கள். இப்படத்திற்காக, தலை சிறந்த அனிமேஷன் கம்பெனியுடன் இணைகிறார் ஆர்.கண்ணன்.

இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் செய்கிறார். வசனத்தை சித்தார்த் சுபாவெங்கட் எழுதுகிறார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். மக்கள் தொடர்பு: ஜான்சன்.

படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இப்படத்தை எழுதி இயக்கி தயாரிக்கிறார் இயக்குநர் R.கண்ணன்.

இப்படத்தின் படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று பூஜையுடன் ஆரம்பமானது.
பைனான்சியர் மகேந்திரா நிஹார் காமெராவை ஆன் செய்ய படபிடிப்பும் இனிதே துவங்கியது.வரும் ஆகஸ்ட் 15 படம்  வெளியீடு.

Related posts

சுழல்- தி வோர்டெக்ஸ் படப்பிடிப்பிலிருந்து வேடிக்கை பகிர்ந்த ஸ்ரேயா ரெட்டி

Jai Chandran

நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்களில் 100 சதம் ரசிகர்களுக்கு அனுமதி

Jai Chandran

TeddyStreamingFromMidnight

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend