Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

த்ரிஷ்யம் 2ல் சுஜா வருணி ரீ- என்ட்ரீ

நடிகர் வெங்கடேஷ் , மீனா நடிப்பில் தயாராகி, தெலுங்கில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘த்ருஷ்யம் 2’. இப்படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக் கிறார். சிறிய இடை வெளிக்குப் பிறகு தெலுங்கில் நடித்திருக்கும் இவர், தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக் கிறார்.

பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு, தன்னுடைய துணிச்சலான குணத்தை யும், அன்பான பண்பு நலனையும் வெளிப் படுத்தி ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை சுஜா வருணி. அவருடைய கடின உழைப்பிற்கு மீண்டும் அங்கீகாரமும், அடையாளமும் கிடைத் திருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு ஏராளமான பெண் தொழில் முனைவோர் களை உத்வேகத்துடன் ஊக்கப்படுத்தி உருவாக்கிய இவர், ‘சுசீஸ் ஃபன்’ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றையும் வெற்றிகர மாக நடத்தி வருகிறார். இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘த்ருஷ்யம் 2’ படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து தரப்பினரின் பாராட்டை யும் பெற்றிருக்கிறார். இதன் மூலம் மீண்டும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் அழுத்தமான வேடங்களில் நடிக்க தயாராகி இருக்கி றார். ‘த்ருஷ்யம் 2’ படத்தில் நடித்ததைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க, தமிழிலும் வாய்ப்பு கிடைத்து வருவதால், அவர் விரைவில் தமிழிலும் மீண்டும் நடிக்கக்கூடும் என தெரிய வருகிறது.

Related posts

நூடுல்ஸ் பட மோஷன் போஸ்டர் வெளியிட்டார் மாரி செல்வராஜ்

Jai Chandran

அரசு பள்ளிகளில் சினேகா நடித்த ஹரிதாஸ் திரையீடு

Jai Chandran

மத கஜ ராஜா வெற்றிக்கு விஷால் உழைப்பு காரணம் – சுந்தர் சி நெகிழ்ச்சி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend