Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“ஆபரேஷன் அரபைமா” படப்பிடிப்பு நிறைவடைந்தது.

முன்னாள் கடற்படை வீரர் பிராஷ் இயக்கத்தில் ரகுமான் கதாநாயகனாக நடித்திருக்கும் “ஆபரேஷன் அரபைமா” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

துருவங்கள் பதினாறு படத்திற்குப் பின் அந்நிய எதிரிகளை வேட்டையாட தன் படையுடன் கடற்படை அதிகாரியாக வருகிறார் ரகுமான்.

நம் நாட்டை அந்நிய ஆபத்துகள் சூழும் நேரங்களிலும், தீயவர்கள் நம் நாட்டிற்குள் கொடுஞ்செயல்கள் செய்யும் நோக்கத்துடன் நுழையும் நேரங்களிலும், நமது இராணுவ வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து ஆபத்துகளிடம் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் நம்மைக் காக்கின்றனர். அதற்காக பல ஆபரேஷன்களை நம்நாட்டு வீரர்கள் வெற்றிகரமான செய்திருக்கின்றனர். அப்படி நடுக்கடலில் நடந்த ஒரு உண்மையான இராணுவ ஆபரேஷனை தழுவி எடுக்கப்பட்ட படம் தான், “ஆபரேஷன் அரபைமா”.

தமிழ்நாடு, கேரளா, அந்தமான், கோவா, துபாய் உள்பட பல இடங்களில், பல கடல்களில் இப்பபடத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் இயக்குநர் பிராஷ் முன்னாள் கடற்படை வீரர் என்பதால், கடலில் நடைபெறும் ஆபரேஷன் உண்மையான ஆபரேஷன் போல இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய உழைத்திருக்கிறார். கேரளா போலீஸ் கமாண்டோ படையின் துணை கண்காணிப்பாளர் அஜித்குமார் மற்றும் நேஷனல் செக்யூரிட்டி கார்டு கமான்டோ பயிற்சியாளர் கேப்டன் அனில்குமார் ஆகியோரை வரவழைத்து ஆபரேஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து இப்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

மலையாள நடிகர் சங்கத்தின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான டினி டாம், இப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயின் ஜார்ஜ்-ம் ஒரு கடற்படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுமான், டினி டாம், பாலாஜி, நாடோடிகள் அபிநயா, அனுப் சந்திரன், ஷிகாத், நேகா சக்ஸேனா, அர்விந்த், சஜி, மனிஷா, ரமேஷ் ஆறுமுகம், கௌரி லஷ்மி, மேபூ உள்பட பலர் நடித்திருக்கும் ஆபரேஷன் அரபைமா படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ராகேஷ் பிரம்மானந்தன், ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஃபீனிக்ஸ் உதயன். பாடல்களை முருகன் மந்திரம் எழுதி இருக்கிறார். நிர்வாகத்தயாரிப்பு: ஏழுமலை சரணவன். இணை தயாரிப்பு: ஜெயின் ஜார்ஜ். தயாரிப்பு: டைம் அண்ட் டைட் ப்ரேம்ஸ் ஸ்டுடியோஸ்.

தேசப் பாதுகாப்பு, கடற்படை, இராணுவ ஆபரேஷன் என எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ஆபரேஷன் அரபைமா படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

93-year-old Charuhaasan joined in Mohan’s Haraa Movie

Jai Chandran

A ZI Clinic’s Next Initiative – Grand Opening of “Reviv”

Jai Chandran

Har Har Mahadev is OUT NOW

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend