Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திட்டம் இரண்டு (பட விமர்சனம்)

படம்: திட்டம் இரண்டு (பிளான் பி)

நடிப்பு: ஐஸ்வர்யா ராஜேஷ்,  பாவல் நவகீதன்,  அனன்யா ராம்பிரசாத்,  சுபாஷ் செல்வம்,  முரளி ராதாகிருஷ்ணன், ஜீவா ரவி,

தயாரிப்பு: சிக்ஸர்ட் எண்டர்டைன்மெண்ட் அண்ட் மினி ஸ்டுடியோ  தினேஷ் கண்ணன், வினோத் குமார்

இசை: சதீஷ் ரகுநாதன்

ஒளிப்பதிவு: கோகுல் பினாய்

இயக்கம்: விக்னேஷ் கார்த்திக்

ரிலீஸ்: சோனி லைவ்

இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா ராஜேஷ் பஸ்ஸில் பயணம் மேற்கொள்கிறார். இருவர் படுத்துச் செல்லும் வசதி கொண்ட் அந்த பஸ்ஸில் தன் அருகில் ஆன் சீட் இருப்பதை கண்டு ஷாக் ஆகிறார்.  ஆனால் அவனோ, ’நீங்கள் இங்கு படுத்துக்கொள்ளுங்கள். நான் டிரைவர் சீட் அருகே அமர்ந்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி எழுந்து செல்கிறான். அவனது பெருந்ததன்மையான போக்கு கண்டு அவன் மீது மெல்ல பரிவு காட்டும் ஐஸ்வர்யா போகப்போக அவன் மீது காதல் கொள்கிறார். பஸ்சில் பயணம் செய்த அவன் நடுவழியில் இறங்கி செல்ல அவனை எண்ணி மயங்குகிறார்.

போலீஸ் நிலையத்துக்கு ஐஸ்வர்யா வரும்போது அங்கு அமர்ந்திருக்கிறான் பஸ் நணபன். அவனை கண்டு இன்ப அதிர்ச்சி அடையும் ஐஸ்வர்யா என்ன ஏதேன்று விசாரிக்கிறார். இந்நிலையில் தனது தோழி சூர்யா காணாமல் போய்விட்டார் என்ற  தகவல் ஐஸ்வர்யாவுக்கு வருகிறது. அதுபற்றி விசாரிக்கிறார். மாற்றுத்திறனாளி ஒருவர் சூர்யாவை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு கட்டத்தில் சூர்யா கார் விபத்தில் சிக்கி தீயில் கருகி இறந்துவிட்டதாக அறிந்து அதிர்ச்சி அடைகிறார். ஆனால் இது இத்துடன் முடியவில்லை. திடீரென்று சூர்யா இறக்கவில்லை உயிரோடு இருப்பதாக ஐஸ்வர்யாவுக்கு தகவல் கிடைக்கிறது. அதுபற்றி தீவிரமாக விசாரிக்க களம் இறங்குகிறார் ஐஸ்வர்யா ஆனால் எதிர்ப்பாராத திருப்பங்கள் நிலைகுலையச் செய்கிறது. இதன் முடிவை கிளைமாக்ஸ் விளக்குகிறது.

க்ரைம் ஸ்டோரியுடன் படங்கள் அடிக்கடி வருகிறது. அதில் ஒரு சில படங்கள் ரசிக்கும்படியும் உள்ளது. அந்த வரிசையில் திட்டம் இரண்டு படம் இடம் பிடித்திருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்ஸ்பெக்டர் வேடம். காக்கி சட்டை மாட்டியதும் விஜயசாந்தியாக மாறி அந்தர் பல்ட்டி அடித்து எதிரிகளிடம் மோதுவார் என்று எதிர்ப்பார்த்தால் முழுக்க அடக்கமான நடிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்து கிறார்.

சிறுவயது முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படித்த தோழி சூர்யா காணாமல்போய் விட்டார் என்று தெரிந்ததும் அவரை கண்டுபிடிக்க போலீஸ் கணக்குகள் போட்டு  மாற்றுத்திறனாளி ஒருவர் அவரை கொன்றிருக்கலாம் என்று எண்ணி விசாரணையில் தீவிரம் காட்டுவது காட்சியை வேகப்படுத்துகிறது. சூர்யாவின் கணவர் முதல் பலரையும் விசாரித்த நிலையில் கண் எதிரே மாற்றுத்திறனாளி வந்து நிற்பதை கண்டு திகைக்கும் ஐஸ்வர்யா அவனை துரத்தி செல்வதும் சாதுர்யமாக பிடிப்பதும் விறு விறு.

சூர்யாவை யார் கொன்றார்கள் என்ற பலமுனை சந்தேகங்களை எழுப்பி ரசிகர்களுக்கு கிளைமாஸில் தரும் ஷாக் சற்றும் எதிர்ப்பாராத டுவிஸ்ட். சூர்யாவை தேடுவதாக ஐஸ்வர்யா கூடவே சுற்றும் அந்த பஸ் நண்பர்தான் உண்மையில் சூர்யா என்ற குட்டு உடையும்போது ஐஸ்வர்யாவை போலவே ஆடியன்ஸும் அதிர்ச்சியில் உறைகிறார்கள்.

ஐஸ்வர்யாவின் தோழி சூர்யாவாக வரும் அனன்யாதான் கதையின் கருவாக இருக்கிறார். தனது வேடத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஐஸ்வஸ்ர்யாவின் காதலனாக வரும் சுபாஷ் கிளைமாஸில் பார்வையாளர்களின் கண்ணுக்கு கேள்விக்குறியாக நிற்கிறார்.

மாற்று திறனாளி கொலையாளி யாக நடித்திருக்கும் பாவல் நவகீத்ன் நடிப்பும் குறிப்பிடத்தக்க வகையில் சஸ்பென்சை அதிகரிக்கிறது.

தினேஷ் கண்ணன், வினோத் குமார் தயாரிக்க விக்னேஷ் கார்த்திக் படத்தின் சஸ்பென்ஸ் உடைந்துவிடாமல் கிளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருப்பது சாமர்த்தியம். கோகுல் பினாய்  ஒளிப்பதிவு  தெளிவு .

சதீஷ் ரகுநாதன் இசை மெல்லிசையாக ஒலிக்கிறது. கூடுதல் வேகம் காட்டியிருந்தால் காட்சிகள் பரபரத்திருக்கும்.

திட்டம் இரண்டு – எதிர்பாராத ஷாக்குடன் கூடிய சஸ்பென்ஸ் த்ரில்லர்.

Related posts

அமிதாப், ரஜினி படங்கள் இயக்கிய பிரபல இயக்குனர் காலமானார்

Jai Chandran

புரொடியூசர் பஜாரின் புதிய பாய்ச்சல்..

Jai Chandran

Tollywood’s First & Fastest 60M+ views with 1.4M+ Likes Pushpha

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend