Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அஷ்வின்குமார் லக்ஷ்மிகாந்த் நடிக்கும் படம் தொடக்கம்

Trident Arts R ரவீந்திரன் தயாரிப்பில்
அஷ்வின்குமார் லக்ஷ்மிகாந்த் நாயகனாக நடிக்கும் “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் பூஜை இன்று கோலகலமாக நடைபெற்றது !

தென்னிந்தியாவின் மதிப்பிற்குரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான Trident Arts R ரவீந்திரன், சமீபத்தில் தமிழ் மக்களின் நெஞ்சங்களை கொள்ளைகொண்ட, திறமைமிக்க, அழகான நடிகரான அஷ்வின் குமார்யை ஹீரோவாக, அவருடைய அடுத்த தயாரிப்பான “என்ன சொல்ல போகிறாய்” படத்தில் அறிமுகபடுத்துகிறார். இப்படம் இன்று காலை எளிமையான பூஜையுடன் சென்னையில் துவங்கியது. இப்படத்தை இயக்குநர் ஹரிஹரன் A இயக்குகிறார். Trident Arts சார்பில் ரவீந்திரன் தயாரிக்கிறார். தற்போதைய சிக்கலான மருத்துவ சூழலில், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு இப்பூஜை நடைபெற்றது. அதுமட்டுமல்லாது, இப்பூஜை நேரடி ஒளிபரப்பாக, இணையதளத்தில் வெளியானது, ஒரு திரைப்பட பூஜை நேரடியாக இணையத்தில் வெளியாவது இது தான் முதல்முறை. “ என்ன சொல்ல போகிறாய் “ படத்தின் படப்பிடிப்பு, இந்த மாத இறுதியில் துவங்கபடவுள்ளது.

இது குறித்து இயக்குனர் ஹரிஹரன் A கூறியது…

துவக்கத்தில் எங்கள் படக்குழு படத்தின் கதாபாத்திரத்திற்கு ஈடுசெய்யும் வகையிலான, ஹீரோயினை தேடும் பணியில் மும்முரமாக இருந்தது. இப்பொழுது, இணையத்தில் தற்போது மிகவும் பிரபலமான திறமை வாய்ந்த அவந்திகா மற்றும் தேஜூ அஸ்வினி இப்படத்தில் இணைந்துள்ளனர். காதல் காமெடி திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் தான் மிகப்பெரும் பங்குவகுகிக்கும். அதனால் கதையின் உயிரோட்டத்தை மேம்படுத்தும் கதாநாயகிகளை தேர்ந்தெடுக்க விரும்பினோம். இருவரையும் ஆடிஷன் செய்த பிறகு, இந்த கதைக்கு பொருத்தமானவர்கள் இவர்கள் தான் என எங்களுக்கு தோன்றியது. அவந்திகா பெங்களூரை சேர்ந்த மாடல் மற்றும் Asku Maaro பாடல் மூலம் பிரபலமானவர்.

அஷ்வின்குமார் லக்ஷ்மிகாந்த் , அவந்திகா மற்றும் தேஜூ அஸ்வினி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் Vijay TV Cooku with Comali பிரபலம் நடிகர் புகழ், டெல்லி கணேஷ், சுப்பு மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். படத்தை எழுதி, இயக்குவது A ஹரிஹரன், ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், இசை- விவேக்-மெர்வின், கலை இயக்கம்- G துரைராஜ், படதொகுப்பு- JA மதிவதணன், அலங்கார பணிகள்- A கீர்த்திவாசன், பாடல் வரிகள் – பாலகுமாரன் M, நடன அமைப்பு- அப்சர் பார்த்துகொள்கிறார்கள்.

Related posts

Vishal, Ariya’s Movie Enemy Teaser

Jai Chandran

சிவராஜ்குமார் புது பட கேரக்டர் லுக் வெளியீடு

Jai Chandran

பூமிகா அறக்கட்டளைக்கு நடிகர் நாசர் நன்றி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend