Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டோலிவுட் ஃபிலிம் நியூஸ் ராஜூகாரு மரணம்..

தெலுங்கு சினிமா இண்டஸ்ரியில் இன்று எந்த புது செய்தியும் ஒரு செய்தியும் பகிரப்படாது.. காரணம் டோலிவுட்டின் ஃபிலிம் நியூஸ் ராஜூ நேற்றிரவு மாரடைப்பில்  காலமானதுதான். கோலிவுட்டில் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் போல் தெலுங்கு திரையுலகில்  பழைய வரலாறுகளைத் தேடித் தேடி சேகரித்து செய்து பொக்கிஷமாய் பாதுகாத்து வந்தவர் ராஜூ.,மேலும் கோலிவுட்டுக்கும் பாலமாக இருந்தவர். ஒரு பி ஆர் ஓ-வாக இருந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவரிவர்..தெலுங்கு சினிமாவில் சகல நடிகர், நடிகைகளையும் தெரிந்து அவர்களின் வளர்ச்சிக்கு நிஜமாக உதவியவர்..

அதே சமயம் டோலிவுட் சினிமா ரிப்போர்ட்டர்கள் எந்தச் செய்தியை எந்நேரம் கேட்டாலும் உள்ளது உள்ளபடி வழங்கியவரிவர்.. அப்பேர்ப்பட்டவரின் திடீர் மரணத்தால் அதிர்ச்சிக்குள்ளான தெலுங்குப் பத்திரிகையாளர்கள் ராஜூ சாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றொரு நாள் எந்த சினிமா செய்தியையும் பகிர வேண்டாம் என்று முடிவெடுத்துகிறார்கள் என்பதும் அன்னாருக்கு அஞ்சலியாக #RIPSir என்றும் #RIPBaRajuGaru எனவும் மட்டுமே சொல்லி ட்விட்டரில் அஞ்சலி செலுத்தி ட்ரெண்டிங் ஆக்குகிறார்கள் என்பதும்தான் ஹைலைட்

Related posts

“அருவா சண்ட”யில் வைரமுத்து பாடலை பாடிய பிரபல நடிகை..

Jai Chandran

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘அவள் அப்படித்தான்’ டைட்டிலுடன்  திரைப்படமாகிறது..

Jai Chandran

நிக்கலோடியோன் சர்வதேச யோகா தினம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend