Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தினகரன் தலைமையிலான அமமுக முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அம்மக) பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. தலைமையில் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வருகிறார். அதிமுகவிலிருந்து தொகுதி பங்கீடு ஒத்துவராததால் அக்கூட்டணியிலிருந்து விஜயகாந்த்தின தேமுதிக விலகியது. தற்போது அக்கட்சி அமமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே அக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும்  ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி, கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட ஏறகவே பலர் விருப்பமணு கொடுத்திருந்தனர். அவர்களிடன் நேர்காணல் நடைபெற்று முடிந்தநிலயில் முதல் கட்டமாக 15  வேட்பாளர்கள் பட்டியல் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டடது,
இதுகுறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க.வின் முதல் கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
ராசிபுரம் (தனி) -முன்னாள் எம்.பி. எஸ்.அன்பழகன் (அ.ம.மு.க. துணை தலைவர்), பாப்பிரெட்டிப்பட்டி-முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் (அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர்), பாபநாசம்-முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ரெங்கசாமி (அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர்), சைதாப்பேட்டை- முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் (அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர்), ஸ்ரீரங்கம்-முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் (அ.ம.மு.க. பொருளாளர்), மடத்துக்குளம்- முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு (அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர்), திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) – முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவன் (அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர்),
சோளிங்கர்-முன்னாள் எம்.எல்.ஏ. என்.ஜி.பார்த்திபன் (அ.ம.மு.க. தேர்தல் பிரிவு செயலாளர்), வீரபாண்டி-முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி எஸ்.கே.செல்வம் (அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்), உசிலம்பட்டி- முன்னாள் எம்.எல்.ஏ. இ.மகேந்திரன் (அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்), கோவை தெற்கு-முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி (அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்), அரூர்-முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ஆர்.முருகன் (அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்), பொள்ளாச்சி-முன்னாள் எம்.பி. கே.சுகுமார் (அ.ம.மு.க. ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்), தர்மபுரி-டி.கே.ராஜேந்திரன் (அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்), புவனகிரி-கே.எஸ்.கே.பாலமுருகன் (அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்) ஆகியோர் நிறுத்தப்பட உள்ளனர்.
இவ்வாறு டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

Related posts

ஒன்றிணைவோம் வென்றிடுவோம்

Jai Chandran

A monumental teaser launch for the most awaited film, Adipurush!

Jai Chandran

மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடுவதா?மநீம அறிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend