Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மோகன்காந்தி ராமன் மறைவுக்கு வி சி குகநாதன் இரங்கல்

பெப்சி முன்னாள்  தலைவர் மோகன் காந்திரமன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறந்தார். அவருக்கு இயக்குனர் வி. செகுகநாதன்இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது, :..

மோகன் காந்திராமன் இவர் இயக்குனர் பா.நீலகண்டன் அவர்களிடம் உதவியாளராக இருந்தபோதே எனக்கு நன்கு பரிச்சயப்பட்டவர்.
உழைப்பதற்கு களைக்காத இவர், புகழ்பெற்ற ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் உறவினர்.எழுபதுகளில் நான் பல படங்களை ஒரே நேரத்தில் எழுதியதோடு, சில படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்தேன்.
ஏறத்தாழ இருபது மணிநேரத்திற்கு மேல் தினமும் பணியாற்றி வந்தேன்.

ஒரு நாள் காரில் வடபழனியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஒரு கார் வந்து என் காரின் குறுக்கே நின்றது.
அதில் இருந்து மோகன் காந்திராமனும், இன்னும் சில உதவி இயக்குனர்களும், கையில் ஒரு மாலையுடன் இறங்கி வந்தனர்.
நான் புரியாமல் கீழே இறங்கினேன்.
மாலையை என் கழுத்தில் போட்டு, “உங்களை நமது இயக்குனர் சங்கத்தில் போட்டியின்றி துணைத் தலைவராக தேர்வு செய்துள்ளனர்” எனச் சொல்லி, அதுவரை சங்கங்களுக்கே போகாதிருந்த என்னை தொழிற்சங்க செயல் பாட்டுக்குள் இழுத்துச் சென்றது அவர்தான்.

அன்றிலிருந்து, பல சங்கங்களில் பல பதவிகளை நான் பொறுப்பேற்க, அவர்தான் பிள்ளையார் சுழி போட்டவர்.

2009ல் நான் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் மாமன்றத்தின் செயலாளர் ஆகும் வரை வளர்ந்து கொண்டே இருந்தேன்.
அதற்கு வித்திட்ட முதல் ஆள் மோகன் காந்திராமன் ஆவார்.

அவர் மறைந்த இந்த நாளில் நமது தோழர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

காற்றிலே கலந்துவிட்ட ஒருவருக்கு, கண்ணீர் அஞ்சலி செலுத்துவது அவசியம்தான். அதைவிட
அவர் வாழுகின்ற காலத்திலே
தனிமையில் வயதான காலத்தில், யாராலும் தேடப்படாமல் கைவிடப்பட்ட காலத்தில்…

நான் மோகன் காந்திராமனைச் சொல்லவில்லை. அவரைப்போல், தலைவர்களாக இருந்து தனிமையில் விடப்பட்ட பலரைப் பற்றி சொல்லுகிறேன்…
அவரிடம் நான்கு நல்ல வார்த்தை பேசுங்கள்.
அவர் செய்த நான்கு நல்ல செயல்களைப் பாராட்டுங்கள்.

நாளைக்கு நமக்கும் இதே நிலை ஏற்படலாம்.
அப்போது வருந்துவதில் பயனில்லை.

ஒருவரின் இறப்பிலும் விளம்பரம் தேட எண்ணாமல், வாழும் காலத்தில் ஏக்கத்தில் வாழும் முன்னாள் பிரபலங்களை மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள்.
அதுதான் மனிதாபிமானம்.

இவ்வாறு வி.செ.குகநாதன்கூறி உள்ளார்.

Related posts

ZEE5 “Anantham” and “Kaarmegam” Widely Spoken Tamil Series

Jai Chandran

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி.. அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

Jai Chandran

வினோதய சித்தம் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend