நடந்து முடிந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி 159 இடங்களை பிடித்து மாபெரும் வெற்றி பெற்றது. திமுக மட்டும் தனிப்பட்ட முறையில் 125 இடங்கள் பெற்று தனிபெரும்பான்மை யான கட்சியாக உருவெடுத் தது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார். அவருக்கு விடைபெறும் முதல்வர் எடப்படி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் , ’எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ் நாட்டின் முதலமைச் சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர் களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித் துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அவருக்கு மு.க,ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் ‘மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோச னையும் ஒத்துழைப்பும் தேவை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!’ என்று தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார். அவருக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட் டுள்ள அறிக்கையில், தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு இதயமார்ந்த நன்றி. தமிழக மக்களின் வளர்ச்சிக்காக எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனக்கேட்டுக்கொள் கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.